பக்கம்:இராவண காவியம்.pdf/397

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆய்வும் மடலம் 371 வென் றிகொண் டெனது மனைவியை மீட்டு மேலவ ரிடர்தவிர்த் தகல்வேன்; சென்று, நும் மிறைவற் கோதியே களப்போர் செயத்தயா ராக்குதி என்றான். 28. இன்னமுங் கேட்டி! எம்மவர் செய்யும் இருந்தவ வேள்வியை யழித்துத் துன் னிடா துங்கள் தாயகம் விட்டுத் துரத்தியும் வருத்தியும் பலவா இன்னல்கள் புரிந்தெம் மினப்பகை யா நும் இறைவனை யொழிக்கவே வந்தேன் என்னவுஞ் சொல்லிக் கதவடைக் காமல் எதிர்பொர வெளிவரச் செய்வாய். 27. என் றவ னுரைப்ப நன்றென நகைத்தே இறமவர்க் கறநெறி யென் னாம்? தன் றவ றுணராத் தகவிலா யுன்றன் தவறதே யுனை யடும் போலும்! இன்றையே வாரும் நாளையேன் தவணை இது மூடி வெனவுரைத் தெழுந்து சென்றனன்; வடவன் நம்மவர் களுக்குச் செருக்கொடு மறமுரைத் திருந்தான், 2. ஆய்வுப் படலம் வேறு 1. மடி தொழி லகற்றத் து தாய் மதிாகு மதிகா யன் போய்க் கொடியவ னிசையா னாகக் குறுகிய வாறு சொன்னாம்; படுமுர சதிரு ஞாட்பிற் பகைதெ றுந் திறனை யண்ணல் நெடியரோ டாய்ந்து கண்ட நெடியதோ ராய்வு சொல்வாம். 2. குறித்ததை யுள்ள வாறு கூறினேன் கொள்ளு மாறு வெறுத்தனன் பலரிவு தன்னை வெகுண்டிதோ ஊரை - முற்றி ஒறுத்து நுங் குலத்தை வேரோ டொழிப்பனென் றெமது சொல்லை மறுத்தனன்' சிறியோ னென்று வந்ததி காயன் சொல்ல. 1. ஞாட்பு-போர்,