பக்கம்:இராவண காவியம்.pdf/398

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


372 இராவண காவியம் 3. கனித்தொகை யொடுசெந் தேலுங் கரும்டிமிழ் சாறும் பாலும் இனித்திடும் பிறவு மொவ்வே மென்றுநொந் துருகி வாடும் தனித்தமி ழகத்தை முற்றும் தன் னொரு குடைக்கீ க ழோம்பும் வினைத்திற மிகுந்த செங்கை வேலவ ன தனைக் கேட்டே, 4. எரிசினங் கனன்று சீறி இன்னனென் றிருக்கை நின்றே அரியெனக் கனைத்தெ ழுந்தே அமைச்சரை விளித்திப் போதே பெரியரைத் தருதிர் நீவிர் பேரமர்த் திறத்தை யாய்ந்து தெரிதரற் கெனவே யன்னார் செப்பினா ரேவல் தம்மால். 5. இதுதெரிந் திலங்கை மூதூர் இருக்குமூ தறிவு மாண்டும் மதியுநன் னெறியுஞ் சால்பும் வாய்மையுந் தூய்மை தானும் பதியர சியலு மான் ற பழக்கமும் பமுத்து மூத்த முதியவர் வந்து தத்தம் முறைமையி னிருந்தா ரம்மா. 8. அன் னவர் தம்மி லான்ற அறிவரா மாடூஉ வொன்றோ ? தன் னிகர் தானே யான தமிழ் மகள் தானே யென்னப் பன்னல வியல்பும் ஆய்ந்து பழுத்த தாட்டி யாரும் மன்னிய விருப்பிற் றத்தம் மரபினில் இருந்தார் மாதோ. முப்பொழு தாய்ந்து கூறும் மூதறி வமைச்சும் மெச்சும் தப்பிலா திகஇச் தானைத் தலைவருங் கலைவ லாரும் கப்பிய கிளையும் நட்புங் கலைநிலை யென்னத் தொக்கார்; இப்பெருங் களரி யார்ப்ப இறைவியோ டிறையும் புக்கான். 8. புக்கவ னிருக்கை யெய்திப் புலமையும் புகழும் வாய்ந்த தக்கசெந் தமிழீர்! உங்கள் தமையழைத் தமையென் னென்ப தொக்கலைப் பகையொன் றின்றி ஒருங்குவன் கொலைசெய் திட்ட அக்கொடும் பாவி தன்னை அடர்த்தற்கென் றறைதல் வேண்டா ?