பக்கம்:இராவண காவியம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இrrகள நாசியர் 5. காட தாமுயிர் கட்.குப் பிணஞ்சுடு காட தாங்கொலை காரரே யின்றொடு வீட தாமவை கட்கு விருந்தெனக் க டி யுண்டுள் குளிர்ந்திடச் செய்குவோம். 8. வலிய வெற்று மடங்க லிருந்துவாழ் மலையை முற்ற மருவி யளவிலா எலிக ளுற்ற வெனவரு வீணர்காள்! தொலைக முற்றும் தொடர்பினி யின்றியே. 7. நைக லந்தசொ லின்ன நவின்றுமே கைக லந்திகல் கண்ணற வொன்றென மெய்க லந்தொளிர் வேலினும் வாளினும் வைக எந்தவி லானு மலைந்தனர். கைய றுருந்தன கால்க ளறுந்தன மெய்ய றுந்தன மேனி சிதைந்தன தையி ருந்த தலைபனங் காயெனப் பொய்யி ருந்த வுடலம் புரண்டன. 9. இப்ப டிக்கள் விருபடை. வெள்ளமும் கைப்பி டித்துக் கனன்று பொருதவே எப்பு றத்து மிரும்பிணக் குன்றுறத் தெப்ப மிட்டரி தேங்கின சோரியே. 10, இற்ற கைகளுங் கால்களு மெண்ணில் உற்று நீந்தியவ் வொண்குரு திக்கடல் செற்ற வின் னுயிர் சேறிய மீனுருப் பெற்ற தாமெனப் பேர்ந்து பிறழ்ந்தவே. 11. பந்த ரிட்டுப் பறந்து கழுகினம் வந்து வெண்ணிணம் வாய்மடுத் தேகின; சிந்து சோரி விழுக்கொடு தின்னவே முந்து குள்ள நரிகளு மொய்த்தன. 5, வீடு-விடுதலை, 7, கை. இகழ்ச்சி. கண்ணற-இடைவெளியின்றாக, 8. மெய்-தோல, தை-அணி, பொய் இருந்த-உயிரற்ற. 9, அரி-கடல், கடல் போல. சோரி-குருதி. 11. வெள் நிணம-கொழுப்பு. விழுக்கு தசிை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/440&oldid=987944" இலிருந்து மீள்விக்கப்பட்டது