பக்கம்:இராவண காவியம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தமிழகப் படலம்

19


65.மட்டவிழ்பூந் திரையில்வருங் கப்பல் கண்டு

'வாழ்கதம், வாழ்கதமி ழக'மோ வென்னப்

பட்டினமக் கடல்வளம்பட் டெனவா லித்துப்

பரதவரப் பெருங்கடலின் பயன் கொள் வாரே,


வேறு


66. பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை

முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல

வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை தன்னீர்

கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா.


67. பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை

ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர

மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம்

காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்.


68.வருமலை யள விக் கானல் மணலிடை. புலவிக் காற்றிற்

சுரிகுழ லுலர்த்துத் தும்பி தொடர்மரை முகத்தர்தோற்றம்

இருபெரு விசும்பிற் செல்லும் பிளமைகீர் மதியந் தன்னைக்

கருமுகில் தொடர்ந்து செல்லுங் காட்சிபோற்றோன்றுமாதோ.


69.திரைதரு பொருளு முப்புச் செறிவிலைப் பொருளு மல்கக்

கரைவரு கப்பல் நோக்கிக் கானலம் புன் னை சாய்ந்து

நரையிதழ்ப் பரத்தி யேங்கு நாள் வெயில் காலை யுப்பின்

பெருவ ளக் குவிய லீட்டும் பெருமணல் கெய்தலோங்கும்.66. முசிதல்-அ று தல். முசிபடுதல் கெடுதல். வசிபுட்.

இருப்பிடம் கெட, துவர்-பவளம். நீர் - தன் மை. 67. பாணி, சீர், தூக்கு-தாளவகை. பாணி- எடுப்பு. சீர்- முடிப்பு. தூக்கு- நிகழ்ச்சி. திவவு-வார்க் கட்டு. 68. அளவு தல்-நீராடல். 69. மல்க- நிறைய. நீரை இதழ்-(பிரிவால்) வெளுத்த இதழ்.