பக்கம்:இராவண காவியம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


20

இராவணகாவியம்


திணைமயக்கம்


70.ஆய்ச்சியர் கடைந்த மோரு மளையொடு தயிரும் பாலும்

காய்ச்சிய நெய்யும் விற்றுக் கரும்பினைக் கசக்கப்பண்ணும்

வாய்ச்சியர் தந்த நெல்லும் வழியிடை யுப்புங் கொண்டு

போய்ச்சுவை படச்சோ றாக்கிப் புசிப்பர்தங் கிளைகளோடே.


71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பனந் தன்னைத்

நின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு

சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி

வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும்.


72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு

நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச்

செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை

முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும்.


73. அஞ்சிறைப் பொன்காற் பூவை யலர்குருந் திருந்துகேட் பப்

பஞ்சிறைப் பவளச் செவ்வாய்ப் பைங்கிளி குறிஞ்சிபாடும் ;

நெஞ்சுநெக் குருகித் தும்பி நெய்தலை நீத்துச் செல்ல

வங்சியர் முகம்போ லுந்தா மரையளி மருதம் பாடும்.


70. அளை - வெண்ணெய். 71. எயினர் - பாலைநில மக்கள். வே தண்டம்-மலை. 78. கொடி-காக்கை . பலாச்சுளையைத் தன் குஞ்சென் று மயங்கியது புறா. 78. பஞ்ச-செம்பஞ்சு, இறை-தங்குதல்.