பக்கம்:இராவண காவியம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழகப் படலம் 74. வரைதரு பொருளுங் கானம் வழங்குறு பொருளும் செந்தா மரைதரு: மருத வேணி மலிதரு பொருளு முந்நீர்த் திரைதரு பொருளு முள்ளூர் செறிதரு பொருளு மெங்கும் விரைதரு பொருள் வாகி மெய்மயக் குறுத்த தம்மா. 75, யாணர்கொண் டெதிர்ப்பா டான வதரிடைச் சிறும்பேர் கல்யாழ்ப் பாணரும். பொருகர் தாமுங் கூத்தரும் பருங்கட் செவ்வாய்ப் பூணணி விறலி யோடு புலவரும் பெற்ற செல்வம் மாணுறப் பெறவே யாற்றுப் படுக்குவர் வள்ளி யோர்பால். 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே , 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தகா னில்த்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா . 78. பேரர சதன்கீழ் மூன்று பெருந்திற லரக மந்தச் சீரர சதன் கீழ்ச் செங்கோற் றிருவமர் நாடும் நன்னாட் டாரர சதன்கீழ்ச் சீறூ ரரசுமாங் கமைந்து மக்கட் சாரர சுரிமை பூண்டு தமிழகம் பொலிந்த தம்மா. 74. ஏணி - நாடு. விரைதல் - ஒன்று கொன்று முற் படுதல். 76. இதுவும் ஐக்கிலத்தும் நிகழ்வது.