பக்கம்:இராவண காவியம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 இராவண காவியம் 14. கூ லியா யிரங்காணங் கொடுத்தாலுங் கோலொருவும் போலியா ரெனுமுரையைப் பொய்யாக்கி மெய்க்கின்றார் வேலியா யிரங்கலநெல் விளையவுயர் மலையிலெழுந் தாலியா வருமொலிய லனை வளற்றுந் தமிழ்நாடர். 15. மண்ணரசு மனையரசும் மற்றையப் றொழிலரசும் பெண்ணரசு மாணரசும் பிரியாத பேரரசாய் நண் ணரசு புரிந்தோருக்கு நல்லரச ராய்வாழ்ந்தார் பண்ணரசர் வளர்த்தவிசைப் டாவர சத் தமிழரசர். 16 இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே. 17, பொன் மான மானாலும் பொருண்மான மானாலும் மன் மான நிலை தீர்ந்து மதிமான மானாலும் கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார் தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர். 18. சிறந்தா னும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந் துறந்தா னும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார் இறந்தே னும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான் மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர். உள மலிந்த பெருங்காதற் கடல்படிந்த வொப்புடையார் கள்வியலாம் புணை தழுவிக் கற்பியலாந் துறைகண்ணி வளமலிந்த மனை வாழ்க்கைக் கரையேறி மகிழ்பூத்தார் குள மலிந்த புனன் மருதக் கொடையெதிருங் குளிர்காடர். 19 14. காணம்-பொன். ஆலித்தல்-ஒலித்தல். ஒலியல்- 16, குறளை-கோட்சொல். சோர்தல்-மறத்தல், இவ் ர. உலோபம், அறங்கடை-குற்றம், 17, மானம்-கேடு. மான-ஒப்ப. 18. பொருவுநிலை-ஒத்தநிலை.