பக்கம்:இராவண காவியம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தான்மொழிப் படலம் 12. பகுத்தறி வுடைய மக்களை யாண்பெண் ப பாலெனு முயர்திணை யாவும் பகுத்தறி விலவோ டனைத்தையு மொன் று - பலவெனு மஃறிணை யாவும் பகுத்தறி தரவீற் றெழுத்தினா லவற்றைப் பாங்குட னுணர்த்திடுந் தமிழ்க்குப் பகுத்தறி வில்லா தாக்கிய வுலகப் பான்மொழி யிணையெனப் படுமோ ? 13. ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை யெனத்தகு சிறுமுகை மணம்போற் பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும் பழமையென் றளவிடு மகவுந் தாங்கிய தாவிற் கன்னியா யிளமை ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை நீங்கிய விள மைச் சிறியவ ருலக நெறியிலா ரொத்துளே மெனலே, 14. வண்புகழ் மூவ ரொடு தமிழ்க் குயிரை வழங்கிய தலைவனுங் காத்த தண்பொழில் வேவித் தமிழக முழுதும் தழைத்தின் திருந்தசெந் தமிழர் கண்பொலி பாவை யுயிரினும் பெரிதாக் கருதியே கவினுற வளர்த்த (மண்புகழ் தமிழ்த்தாய் சிறப்பினை முழுதும் வகுத்துரைத் திடவலன் கொல்லோ! 15, உருவமு மியல்போ டெளிமையும் வளமு மொருங்கமைந் தெழுதரு மெழுத்தும் அருமையி னெழுத்தா னியன் றசெஞ் சொல்லு மாகிய வுறுப்பினை யுடைய பொருளெனும் பெண்ணை யருமையி னீன்று பொருந்திசை யோடுகூத் தென்னுந் திருமணிக் கலனோ டுடையணிந் துள்ளத் திகழ்ந்தன ளருந்தமி ழன்னை. 13 அக்வு-வயது,