பக்கம்:இராவண காவியம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆசிலாத் தனித்த நடையுமா சியவில் வறுவகைச் சிறப்பொடு பொலிந்து மாசிலா மணியா யொளிர் தமிழ்த் தாயை வ.-குட மாதரொப் பாரோ? 10. ஏயதங் கருத்தை யுரைத்திடும் பாட்டு முரையுமா கியமுத லியலும் மேயவப் பாட்டைப் பண்ணொடு திறனு மேவுற விசைத்திடு மிசையும் வாய்வவ் விரண்டோ டுளப்படு கருத்தை மனக்கொள நடிக்குகா டகமும் ஆயமூ வுறுப்பி தனை யுறுப் பறையென் நிறைகுவ ரறிவிலா வெள்வர். 11. ஒருவகை யொலிப்பு மிருவகை வழக்கு முரியமுப் பெயருகாற் பாவும் இருதகை வருமைந் தியலுமா றுறுப்பு மெழுவகைத் திணையுமெண் வனப்பும் மருவிய வொன்பான் சுவையும்பத் தழகும் வகைபட வமைதமிழ் மொழியைத் திருகிய மனத்தார் சிறப்பிலை யென்று செப்பினொப் பவர் பொறுப் பவரே. 9, பெரியார் சொற் கிட்வாமை-இலக்கணவரம்புடைமை. மணிப்பூண்பெருக்கு இலக்கியப் பரப்பு. 10. வாய-வாய்த்த. வெளவர்-பொறாமைக்காரர், 11. இரு தகைவரும் - மிகத் தகுதி வாய்ந்த. இயல்- இலக்கணம், இருவகை வழக்கு-உலகவழக்கு செய்யுள்வழக்கு. முப்பெயர் - இயல், இசை, நாடகம். நாற்பா- வெண்பா, ஆசிரியும், கவி, வஞ்சிப்பா, ஐந்திலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி. ஆறு றுப்பு-எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, எழுவகைத்திணை 8-ம் பாட்டில் காண்கி, வனப்பெட்டு-அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. ஒன் பான் சுவை-நகை, அழுகை, இழிவு, வியப்பு, அசி சம், வீரம், வெகுளி, உவகை, நடுநிலை. பத்தழகு" சுருக்கச்சொல்லல் முதலியன. (மரபியல்-109)