பக்கம்:இராவண காவியம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28, 0, இரட்ன மாயம் 28. நன்னய மமைந்தவிர் நரம்பினொடு பாடும் சொன்னய மமைந்தகுழ லோடினிய தோலின் பன்னய மமைந்திலகு பல்லிய மிசைப்போர் முன் னிய கொடுத்துயரு முத்தமிழ் வளர்த்தார். 27. வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்து தாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மை ஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப் போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனை வார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ள ஓங்குமுசில் தோய்முக டுயர்ந்தமலை யேறி ஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும் யாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். 29, என் றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக் கன் றினொடு தூங்கிவரு கைப்பிடி, புணர்ந்த வென்றுகொடு வந்தவெறி வேழமது தந்து நன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். 30. மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும் பாணரொடு கூடவரு பாடினியார் கொள்ளச் சேணமரு வுங்குதிரை தேரொடு கொடுத்துங் காணிய படிக்கவர் கலைத்தமிழ் வளர்த்தார். தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தா ராய்க்கொலை புரிந்தவுட வாரியரின் மானச் சேய்க்குண மிலாதவீழி தீயரை யொறுத்தே தாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம்-வேறு 32. பல்வளப் புடையதென் பாலி நாட்டிடைக் கல்வளப் பஃறுளி யாற்றின் கண்ணமர் நல்வளப் புடையதொன் னகர மேவிய சொல்வளப் படுதமிழ் சுவைத்த பாண்டியன், 31. 26. ஐயம் இனிமை. இயம்- இசைக்கருவி, முன்னிய. எண்ணிய, 31, சேய்க்குணம்- தாயைப் பேணுங் குணம், 32, கில்-மலை.