பக்கம்:இராவண காவியம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35) 38. 'தாய்மொழிப் படலம் 33. புலக்கணி னுணர் தமிழ்ப் புலவ ராக்கிய இலக்கிய விலக்கண வெண்ணில் நால்களை நலக்குறு புலவர்தங் குழுவி னாப்பணோர் அலக்குறு பொணருல மாய வெண்ணினான். 34. எண்ணிய படியுள வெழுச்சி மீதுற அண்ணிய பொதுமைநோக் கறிஞர் தங்களை நண்ணியே யமர்வுற நகரிற் கூட்டியே கண்ணிய மொடு தமிழ்க் கழகங் கண்டனன். கண்டவக் கழகமுன் கருத்தை யேற்றியே வண்டமிழ் நூல்களை வரைய றுத்திடத் தண்டமி முகத்திடைத் தமிழின் வாழ்வுறும் ஒண்டமிழ்ப் புலவரை யொருங்கு கூட்டினன், கூட்டிய புலவரைக் குமரி காட்டிடை சகாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக் கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களை ஏட்டி.டை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக் கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவை உண்ணியே யுடன் பட வுரைத்துத் தம்முளத் தெண்ணிய படியரங் கேற்றி னாரரோ. 38. அவ்வரங் கேறிய வரிய நூல்களை ஒவ்வொரு தமிழரு மோதி யின்புற அவ்விடை, யேடெழுத் தாணி மேவிய செவ்விய தமிழ்க்கொடி செறித்திட் டானரோ. 39. அவ்வகை யொவ்வொரி யாண்டி னோர்முறை செவ்விய நூலரங் கேற்றிச் சீருற ஓவ்விய படியெலா முழைத்துத் தீஞ்சுவை வவ்விய முத்தமிழ் வளர்த்து வந்தனன். 35, புலக்கண்-அறிவுக்கண். அலகு உடறு-அளவுபட்டி, பகுதிப்பட்ட. அது, அகம் புறம். 36. கோட்டி கூட்டம். 37. கண் ணு தல்-கருதுதல். உண்ணு தல்-கேட்டல்,