பக்கம்:இராவண காவியம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுநன்றியுரை

இக்காவிய அமைப்புக்கு ஆன்ற உதவிபுரிந்த, சென்னை மாநிலத் தமிழ்ச்சங்க அமைச்சர், உயர் திரு, புலவர், இ. மு. சுப்பிரமணிய பிள்ளை அவர் கட்கும், அவ்வப்போது படித்துப்பார்த்துக் கருத்தறிவுறுத்த புலவர் பெருமக்களுக்கும், மனமுவந்து பாராட்டிச் சிறப்புப்பாயிரம் உதவிய 4 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கட்கும், அன்புடன் ஆராய்ச்சி முன்னுரை உதவிய தளபதி அண்ணாத்துரை அவர்கட்கும், தானே முன் வந்து, இந்நூற் பதிப்புக்கு வேண்டிய பொருள் முழுதும் உதவி, என்னைத் தமிழ்மக்களுக்குரிமையாக்கிய, பெருஞ் செல்வரும், சிறந்த பஞ்சுவணிகரும், தமிழர் விடு தலைக்காக அரும்பெரும் தொண்டாற்றி வருபவருமான - திருப்பூர், எஸ். ஆர். சுப்பிரமணியம் அவர் கட்கும், இந்நூல் அச்சிடுவதற்கு உடனிருந்து வேண்டிய உதவி புரிந்துவந்த சென்னை முத்தமிழ் நிலையச் சொந்தக்காரர் அன்பர், மே. சக்கரவர்த்தி நயினார் அவர்கட்கும், அச்சக நெருக்கடியான இக் காலத்தில் மிகக்குறைந்த நாளில் நன்கு அச்சிட் தெவிய சென்னைத் திருவல்லிக்கேணி, ஜோதி அச்சகச் சொந்தக்காரரும், சிறந்த எழுத்தாளருமாகிய தோழர், அ. கி. ஜயராமன் அவர்கட்கும், தங்கள் தொழிற்றறமையால் விரைவில் நல்ல முறையில் அச்சிட்டுத்தந்த ஜோதி அச்சகத் தொழிலாளத் தோழர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

அன்புள்ள,
குழந்தை.