பக்கம்:இராவண காவியம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இராவண காவியம்.pdf
புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் அவர்கள்
     சிறப்புப் பாயிரம்
 “பாவண மல்குமி ராவண காவியம் "
 நாவண மல்கிய நல்லா சிரியனும்,
 நல்மலி ஓல வலசுவாழ் முத்துச்
 சாமிசின் னம்மை காமுறு செல்வ
 மைந்தனும், ஆய செந்தமிழ்க் குழந்தை
 செப்பினான்; அறிவுல கொப்பு மாறே!
 இப்பெரு நூற்பயன் எவரும் எய்தும்
 விருப்பூர்த் தானாய் திருப்பூர் வள்ளல்
 நப்புகழ் எஸ். ஆர். சுப்பிர மணியம்
 களித்துமே பதிக்கக் காண்பொருள் முழுதும்
 அளித்தபே ருதவி யாதுமறப் பரிதே:-
 இராவண காவியம் எனுமிது தமிழகத்
 திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக,
 ஆக்கியோன் குழந்தையும், அச்சிடப் பொருளைத்
 தூக்கியே தந்த சுப்பிர மணியமும்
 ஆழிசூ ழுலகில் என்றும் 
 வாழிய நன்றே வாழிய நன்றே.
             -பாரதி தாசன்.