பக்கம்:இராவண காவியம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவண காவியம் 34. மனப்பயிரைப் பொருண்மாற்றி மடியின் றிக் குடிகொண்டு முனைப்புயர வளர்த்துவரு முறையேபோல், பெருக்காளர் இனப்பயிரைப் போகமெலா மிடமாற்றிப் பயிர்செய்தே இனித்த தமிழ்ப் பயனேபோ லிரும்பயன் கைக் கொள்வாரே. 35. அருள்பதித்துப் பிறவுயிர்க்க ணன் புவைத்துப் பசியென்னும் இருள்பதைத்து வெருண்டோட வீட்டுண் ணுங் கடப்பாடர் தெருள்பதித்த பாவினிடைச் செந்தமிழ்ப்பா வாணர்கணல் பொருள்பதித்தல் போன் றவர்நற் பொறுக்குவிதை விதைப்பாரே. 36. கண் வளர்ந்து வளர்கவெனக் காதலிளங் குழவிதனைப் பண் வள ருந் தொட்டிலிடைப் படுக்கவைக்கும் படியேபோல், மண்வளர்ந்து வெளிப்போந்து வளர்கவென வுழுபடைச்சாற் கண்வளர விதையினைக்கட் காவியர்சா விடுவாரே. 37. செயிர்வளர விடங்கிடையாச் செழுமனையிற் றகைமையுற அயிர்வளர வமைசுண்ணத் தறைகள்பல வமைக்குதல்போல், உயிர்வள ர வுணவுபடைத் தூட்டுவிக்குங் காரா ளர் பயிர்வள ரப் புழுதியினைப் பாத்திட்டித் திடுவாரே. 38. அட்டிலிடைத் தொழில் புரியு மன்னையிளங் குழவிக்கு வட்டி.லிடை யடிக்கடி பால் வார்த்து வளர்ப்பது போலக், கட்டிய நீள் பாத்தியிடைக் கருக்கொண்ட பயிர்வளர அட்டிடுவா ரடிக்கடி நீர் ஆய்போலு மன்புடையார். 84. மனப்பயிர்- அறிவு, முனைப்பு-ஊக்கம். இனப்பயிர். ஒரே பயிர். 35. தெருள் - தெளிவு, 37. செயிர். குற்றம். அயிர் - நுண்மை . 38. அட்டில்-அடுப் பல ற. அட்டுதல்-நீர்பாய்ச்சுதல்.