9
இலங்கைப் படலம்
39, பகைபட்ட போர்க்களத்தே புகைப்படையை
விட்டுவைக்கும்
வகைப்பட்ட விறலில்லா மறமன்னர் போலன்றித்,
தகைபட்ட பயிருணவைத் தானுறிஞ்சிப் .
பயன்கொல்லும்
தொகைபட்ட களைகளைந்து தொகுவளங்கைக்
கொள்வாரே.
தாலூட்டிப் பொரிகடலை தமையின மாக்
கொளல்போலும்,
நூலோட்டிப் பாவினிடை நூ லுடைநெய் வதுபோலும்,
சூலூட்டிட் பண்படுத்த தொகுபுழுதி யிடைகுறுக்குச்
சாலோட்டி முத்திரையினைத் தவசமிடைப் படுப்பாரே.
41. அறிவாளர் குலம்பெருக வறிவிலியர் குலஞ்சிறுக
முறையாகப் பயில்வோர்க்கு மொழித்தேர்வு
நடத்துதல்போல்
செறிவான நிலமிளகச் சிறிதகலத் திறலுடைய
(நிறைவான பயனுதவ நெடும்பயிரை யுழுவாரே.
42. களையேகப் பயிருழவான் கார்பொழியச் செழியபயிர்
வளையாது தலைநிமிர்ந்து வானோக்கி வளர்ந்துலகம்
உளை யாது வயிறார வுண்டுமகிழ் கொண்டிடப்பல்
கிளையாகிக் கிளை தோறுங் கிளம்பின காண் பசுங்க திரே.
43. ஆழியா லுலகோம்பு மரசாமு த லனை வோரும்
நாழியா லுயிரோம்ப நன்செயினும் ! புன்செயினும்
மேழியா லுலகோம்பும் வேளாளர் விளைபயிரின்
காழியா லுயிரோம்புங் கதிரினிது காப்பாரே.
44. முதிர்வெய்தப் பாவிருக்க முடிந்த துணி யறுப்பதுபோல்,
கதிர்கொய்து தாளிருக்கக் களத்தடித்துப்பொலி தூற்றி
எதிர்பெய்த தொழிலாளர்க் கினிதீந்து மனை சேர்த்துக்
கு திர்பெய்து விருந்தேற்றுக் கொண்டினிதுண்
டிருப்பாரே.
49. விறல் - வலி. 40. தால்-நா. சூல் - கரு, விதை .
முதிரை-பயறுவகை, 43. உளை தல்-வருந்துதல்,
48. ஆழி-சக்கரப்படை. நாழி-படி. காழி-க திரின்
தாள். 44. எதிர்பெய் தல் - உதவுதல். குதிர்.
தவசிக்கூடு.
பக்கம்:இராவண காவியம்.pdf/85
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
