பக்கம்:இராவண காவியம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இலங்கைப் படலம் 74. தொட்டிடை யாடை தொடர்பவர் சிக்காக் கட்டுவோர் கையைக் கடந்துமே கோநாய்க் குட்டி பிடித்துங்; குறுநெடுந் தட்டுக் கட்டியும் வெண்ணிலாக் காலங் கழிப்பர், 75. ஓடி யொளித்து மொளிப்பவர் தம்மைத் தேடியே கண்டுந் திரும்புவ ரோர்பால்; மாட மறுகில் வளைப்படு கையார் ஆடுவர் கிச்சுக்கிச் சாம்பரி யோர்பால். 76. காம்பன தோளொடு கையுற வாட வாம்பரி போல மணிச்சிலம் பாட தூம்டான வாயர் துடியிடை கோட ஆம்புரி தாண்டி யகமகிழ் வாரே. 77. ஒண்டொடி யோசை யொடுசிலம் போசை மண்டல மிட்டு மயங்கிட வான வெண்டிரை போல விரிந்த நிலாவில் நொண்டி. யடிப்பர் அடங்கிடை நல்லார். 78. குடுகுடு வென்று குடுவியே சென்று நடுவீடந் தன்னை நணுக விடாது ) படவனைப் போர்கை படாதுமே தொட்டுச் சடுகுடுப்பான் விளை யாடுவர் தானே, 73. மணிநிழல் மன்ற மருங்கிடை நாளும் திணிகழற் செல்வச் சிறுவர்கள் கூடிக் குணில து கொண்டு குழிதனைப் புல்லி அணுக விடாதடித் தாடுவர் புல்லி, கொந்தொளி மாடக் கொடுமுடி. நீழல் செந்தமிழ் நாட்டுச் சிறுவர்கள் கூ டிப் பந்தயங் கட்டிப் பலவகை யான பந்துக ளாடிப் பயன்பெறு வாரே. 80. 74. இடை ஆடை தொட்டு இடையில் கட்டிய ஆடை யைப் பிடித்துக்கொண்டு, 76. காம்பு-மூங்கில். தூம்பு-இசைக்குழல், கோட்- வளை ய, ஆம்-அழகு. புரி-கயிறு. 79. குணில்-கு றுந்தடி. புல்லி-புற்குச்சி, புல்லியாட்டம், 80. கொம் து ஒளி-ழிக்க ஒளி.