பக்கம்:இருட்டு ராஜா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்99


மற்றவர்களுக்கும் சரியானபடி கிடைத்தது.

“டார்ச் லைட்டை அடியப்பா, இவனுக மூஞ்சி அழகைப் பார்க்கலாம்” என்று முத்துமாலை சொன்னான்.

திருட வந்தவர்கள் திமிறி விடுபட முயன்றது பலிக்கவில்லை. அவர்கள் தப்புவதற்கு முயன்றபோதெல்லாம் அடியும் குத்தும்தான் கிடைத்தன.

லைட்டின் பிரகாசமான ஒளி அவர்கள் முகத்தைத் தடவியது. அவர்களுடைய கண்கள் கூசின.

“எலே, மாடசாமி, உனக்கு ஏமிலே இந்தப் புத்தி? நம்ம ஊர் கோயில் சிலைகளைக் களவாடிக்கிட்டுப் போக நீயே துணை வந்தியா?” என்று சீறினான் முத்துமாலை.

மற்றவர்களின் கைகள் மாடசாமியை விசாரித்தன.

“ஏ, இவங்க வேட்டிகளை அவிழ்த்து இவங்க கைகளை இறுக்கிக் கட்டுங்க” என்று உத்தரவிட்டான் முத்துமாலை.

காரில் வந்தவர்கள் நாகரிகமானவர்கள். ஒருவன் கோட்டு அணிந்திருந்தான். இருந்தாலும், வேட்டிதான் கட்டியிருந்தான். இன்னொருவன் ஸ்லாக் ஷர்ட் போட்ருந்தான். மாடசாமி வெறும் உடலில். துண்டைத் தலைப்பா கட்டியிருந்தான், இடுப்பு வேட்டியை தார்ப் பாய்ச்சிக் கட்டியிருந்தான்.

அவர்கள் கைகள் நன்கு இறுக்கிக் கட்டப்பட்டன.

“ஐயாமார்களே, நீங்க வாலாட்ட முடியாது. ஏதாவது இசகுபிசகா நடக்க முயன்றா, இந்தா பார்த்துக் கிடுங்க”என்று தனது சுடலைமாடன் அரிவாளை முன்னே துாக்கிக் காட்டினான் முத்துமாலை.

“சுப்பய்யா, நீ ஒடிப்போயி, ஊரிலே எல்லா வீட்டுக் கதவையும் தட்டி விசயத்தைச் சொல்லு. கோயில்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/101&oldid=1139565" இலிருந்து மீள்விக்கப்பட்டது