பக்கம்:இருட்டு ராஜா.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் ( 125 பிச்சையா மகள் பாப்பா கொத்தனார் மகனை கல்யா னம் பண்ணிக்கிட்டா. ஊரும் உறவும் என்ன செஞ்சு போட்டுது: அதெல்லாம் ஏன்? நான் இல்லையா? இருட் டோடு வந்த எவளோ ஒருத்தியான தனபாக்கியத்தை சேர்த்துக்கிட்டு ஊர் நடுவிலேயே வாழ்க்கை நடத் தலையா? ஊரு உறவு, பழிப்பு சிரிப்புன்னு யோசிச்சுக் கிட்டிருந்தா, நம்ம சந்தோஷங்களை நாமே காவு கொடுக்க வேண்டிய கட்டங்கள்தான் நிறைய வரும்.” முத்துமாலையின் உபதேசம் ராமதுரையை சிந்திக்க வைத்தது. அவன் மவுணத்தில் ஆழ்ந்தான். அவன் யோசிக் கட்டும் என்று முத்துமாலையும் விட்டுவிட்டான். இரண்டு பேரும் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் மெது நடையாகக் கோயில் பக்கம் போனார்கள். வழியில் ஒரு ஒட்டலில் வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொண் டார்கள். "நேரே நாம கோயிலுக்குப் போவோம். கடற்கரை யாண்டி கோயில் மண்டபத்திலே காற்று ஜிலுஜிலுன்னு வரும். சுகமாயிருக்கும். அங்கே உட்கார்ந்தபடி வாற வங்க போறவங்களை கவனிப்போம். நம்ம புள்ளிக்காரங் களும் அங்கே எப்படியும் வந்து சேருவாங்க' என்றுமுத்து மாலை சொன்னான். கோயிலுக்கு வந்ததும் ராமதுரை சொன்னான், 'வந்ததோ வந்தோம்.சாமி தரிசனமும் பண்ணிரலாமே' என்று. "ஆகா, பண்ணினாப் போச்சு!’ என்று உள்ளே போனான் முத்துமாலை. பிறகு இருவரும் பிரகாரம் சுற்றி வந்தார்கள். உள் பிரகாரம் வெளிப் பிரகாரம் இரண்டையும்தான், வள்ளி ஒளிஞ்சக் குகையைபார்த்து வைக்கலாமே" என்று திரும்பி அங்கே போவதற்கான வழியில் நடந்தார்கள்.