பக்கம்:இருட்டு ராஜா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்143

 வீட்டுல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. திண்ணையிலும் ஒரு விளக்கு எரிந்தது.

அப்போது அங்கே வந்து நின்ற திரிபுரத்தைப் பார்க்கவும் “திக்கென்றது” அவனுக்கு.

தலை பரட்டையாகக் காட்சி தந்தது. தலைமுடிக்கு எண்ணெய் தடவிப் பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும். நெற்றி நடுவில் “டேஞ்சர்லைட்” மாதிரி சிவப்புக் குங்குமம் பெரிசாகத் தீட்டப்பட்டிருந்தது. அது வட்டப் பொட்டாகவுமில்லை, விபூதிப் பூச்சு மாதிரி நெற்றி பூராவும் இழுக்கப்பட்டிருக்கவுமில்லை; இருந்தாலும், முகத்துக்கு ஒரு கோரத்தன்மை அளிப்பதாய் நெற்றியில் பாதியை அடைத்துக் கொண்டு பளிச்சிட்டது. அது அவளுடைய கண்களில் குளுமை இல்லை; இயல்பான ஒளி சுடரிடவில்லை. வெறி கலந்த தனி ரகப் பார்வை தேங்கியிருந்தது.

முத்துமாலையைப் பார்த்ததும் அவள் சிரித்தாள். ஆரோக்கியமான சிரிப்பு அல்ல. அது ஒரு பெண்ணின் அறிமுகப் சிரிப்பு இல்லை. நளினமான வரவேற்பு நகைப்பும் இல்லை.

அவள் சிரிப்பும் முகந்தோற்றமும் முத்துமாலைக்கே மனசினுள் ஒரு அரிப்பை உண்டாக்கியது. பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லாதவன்தான் அவன். ஆனாலும் அந்த நேரத்தில் மங்கிய விளக்கொளயில், விசித்திரமாகச் சிரித்து நின்றவளைக் காண்கையில் “பேய் புடிச்சவ மாதிரில்லா தோணுது” எனும் நினைப்பு அவன் மனசுல் நெளிந்து கொடுத்தது.

அவன் பேச்சு கொடுக்கும் முன், அவளே பேசி விட்டாள்;

“வாரும் வே, அதையிள்ளே! இங்கேயும் திருட்டை கண்டு பிடிக்கவந்தீரா?சிலைகள் பதுக்கப்பட்டிருக்கான்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/145&oldid=1140249" இலிருந்து மீள்விக்கப்பட்டது