பக்கம்:இருட்டு ராஜா.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 இ இருட்டு ராஜா அவன் உள்ளத்தில் வேதனைகலந்த வியப்பு குறுகுறுத்துக் கொண்டிருந்தது. அமைதி இழந்த முத்துமாலை நிறைய நிறையக் குடித் தான். அவனுடைய கூட்டாளிகளே அவன் போக்கைக் கண்டு அஞ்சினார்கள். இது நல்லதில்லே அண்ணே. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது' என்று எச்சரித்தார்கள். ாப்ச குடிமுழுகிப் போகுமாக்கும்! இத்தனை நாள் இருந்து என்னத்தை கிழிச்சிட்டோம்? இனிமேலும் உசிரோடிருந்து எதை பெரிசா வெட்டி முறிக்கப் போறோம்? இன்னிக்குச் செத்தா நாளைக்கு காடாத்து; பதினாறாம் நாள் கருமாதி. சவத்தை விட்டுத் தள்ளு’ என்று சுரத்தில்லாமல் பேசினான். . . இது வேறு முத்துமாலை என்று பட்டது அவனது நண்பர்களுக்கு முன்பெல்லாம் இப்படி வறண்ட குரலில், வாழ்ந்து முடிந்து ஓய்ந்து போனவன் போல, அவன் பேசி யிருக்கமாட்டான். அவன் செயல்களிலும் மாறுதல் தென்படத்தான் செய்தது. - எதிலுமே அவனுக்கு ஆர்வம்இல்லாமல் போய்விட்ட தாகத் தோன்றியது. ஊர் விவகாரங்களில் அக்கறை காட்ட மறுத்தான். இரவு நேரங்களில் நிகழ்கிற அக்கிரமங்களில் அநியா யச் செயல்களில் தலையிட்டு, நீதி வழங்க வேண்டியதுதண்டனை கொடுப்பது அல்லது சமரசம் செய்து வைப் பது-தனது பொறுப்பு என்று நம்பியவன் போல் அனைத்து விவகாரங்களிலும் குறுக்கிட்டு ஆக்கினைகள் செய்து வந்த அண்ணாச்சி' யாக இல்லை. அவன் இப்போது. - ஒரு ராத்திரி, ஒரு சிறிய வீட்டில் பெரும் கூச்சலாக