பக்கம்:இருட்டு ராஜா.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 口 @@L@ ケfrgT கொண்டிருக்கிற போது நீ படிச்சுப் பாட்டைத் தொலைச்சே! கடைக்குப் போயி இதை வாங்கிட்டு வா என்று துரத்துவார். இதனால் எல்லாம் முத்துமாலையின் உள்ளத்தில் ஒரு கசப்பு வளர்ந்து வந்தது. எனவே, அவனுடைய பதினொன்றாவது வயதில் தந்தை இறந்து போனதும், அவன் துக்கம் கொள்ள வில்லை. 'தொல்லை போய்த் தொலைந்தது' எனறு அவனுடைய அடி மனசில் ஒரு ஆனந்தமே ஏற்பட்டது. பூவுலிங்கம்பிள்ளை தான் நினைத்த மூப்பாக"மனம் போனபடி எல்லாம் வாழ்ந்து நாட்களை ஒட்டினார். விடும் வயல்களும் இருந்தன. அப்படி வாழ்வதற்கு அவை நன்கு உதவின கவுரவமாக வீட்டிற்கு வரவழைத்துக் குடித்தார்.விரும்பிய பெண்களை சேர்த்துக் கொண்டார். மனைவியிடம் சண்டை போட்டார். சமாதானமாகவும் இருந்தார். முத்துமாலையின் தாய் வடிவம்மாள் அவனிடம் அளவுக்கு அதிகமான அன்பு செலுத்தி அவனைக் கெடுத் தாள். ஒரே பையன். அந்தச் செல்லம். தந்தை அவனைச் சீராட்டவில்லையே என்ற ஆதங்கம் வேறு. அப்பா இறந்த மூன்றாவது வருடமே யையன் "ஏட்டைக்கட்டி இறைப்பிலே சொருகிவிட்டான்' என்று சொல்ல வேண்டும். அவன் படித்தகாலத்தில் கூட ஏடுகள் இல்லாமல் போயிருந்ததால் புத்தகங்களையும் நோட்டுக் களையும் வெந்நீர் அடுப்பில் போட்டுவிட்டான் என்று கூறலாம் முத்துமாலை அப்படித்தான் செய்தான். அவர்களுடைய வயலை மேல் பார்வை' பார்த்து வந்த பெரியப்பா பாபநாசம் பிள்ளை கள்ளக்கணக்குகள் எழுதியும், தில்லுமுல்லுகள் பண்ணியும் ஏமாற்றிவந்தார். வடிவம்மாள் பொம்பிளை, முத்துமாலை சின்னப்பயல்