பக்கம்:இருட்டு ராஜா.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 0 57 'இருபது முடிஞ்சிட்டுது.' ': அதுக்குள்ளே எவ்வளவோ அனுபவங்கள்! இல் லையா?’ என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் வீடு சேர்த் தtrர்கள். பெரிய வீடாக இருப்பதை அவள் பார்த்தாள். நான் இங்கே இந்தத் திண்ணையிலேயே படுத்துத்துங்குறேன்’ என்றாள். - வீட்டிலே எத்தனையோ அறைகள் இருக்கு. நீ ஒரு அறைக்குள்ளே படுத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பயம் இல்லாமல் தூங்கலாம். வீட்டிலே வேறே ஆள் யாருமே இல்லையேன்னு நீ பயப்பட வேண்டாம். என்னாலே உனக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற். படாது' என்று முத்துமாலை அறிவித்தான். அய்யய்யோ!' என்று பதறி, தன் கையினால் வாயைப் பொத்திக் கொண்டாள் அவள். உங்களைப் பற்றி நான் தப்பா எதுவும் நினைக்கலே. நீங்க நல்லவங்க என்கிறது இருட்டிலே இவ்வளவு தொலைவு தனியா நடந்து வரும் போதே நல்லாத் தெரிஞ்சிட்டுது. கெட்ட எண்ணம் கொண்டவங்கன்னா உங்களை மாதிரி கேட்டுக் கிட்டு சும்மா நடந்து வந்திருக்க மாட்டாங்க. நீங்க விலகி விலகியே நடந்தீங்க...' 'சரி எனக்குத் தூக்கம் வருது. விடியக்காலம் பேசிக் கிடலாம்' என்று அவளை ஒரு அறைக்குள் அனுப்பிவைத் தான் அவன். காலையில் அவள் சீக்கிரமே எமுந்து விட்டாள். வீட்டுக்குள்ளேயே கிணறு இருந்தது. அதில் நீர் இறைத்து வசதியாகக் குளித்தாள். மாற்றுடை அவளிடமே இருத் தது, ஒரு துணிப்பையில் எடுத்து வந்திருந்தாள்.