பக்கம்:இருட்டு ராஜா.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 ) இருட்டு ராஜா அது பந்தலில் விழுந்துபத்திக் கொண்டிருக்கலாம்'என்று அபிப்பிராயப்பட்டார் ஒருவர். 'நீ என்ன டே நெனைக்கிறே முத்துமாலை?’ என்று ஒருவர் அவனிடம் கேட்டார். "எனக்கு எதுவுமே தோணலே அண்ணாச்சி, ஆனா இது ஊருக்கு நல்லதில்லேன்னு படுது..கொடை கொடுத்த நாலாம் நாள் பந்தல் பத்தி எரியணும்னு சொன்னா தீ தானாப் பிடிக்காது. எவனாவது வச்சுத்தான் பிடிச்சிருக் கணும். எவன் எதுக்காக வச்சிருப்பான்கிறது புரியலே. விளையாட்டா சின்னப்பயலுக வச்சிருந்தாலும் சரி, விபத் தாக கட்டை பீடி விழுந்து தீப்புடிச்சிருந்தாலும் சரி வினையாக எவனும் திட்டமிட்டுச் செஞ்சிருந்தாலும்.சரி, இது நல்லதுக்கில்லே. அப்படிச் செஞ்குருப்பது யாருன்னு நம்மாலே கண்டுபிடிக்க முடியலியே, அது தான் எனக்கு வருத்தமா இருக்கு. குத்தம் செஞ்சிட்டு தண்டனை பெறா மல் தப்பிக்க முடிஞ்சிருது பாருங்க. அந்த அநியாயத்தை என்னாலே சகிக்க முடியலே!’’ முத்து மாலை இதைக் கூறி விட்டு தலைகுனிந்து நடந்தான். 13 வழக்கம் போல் முத்துமாலை ராத்திரி நேரங்களில் குடித் தான்; தெருக்களைச் சுற்றினான், அடிக்கடி சீட்டி அடித் தான். என்றாலும் அவன் உள்ளத்தின் ஆழத்திலே எதுவோ இடிந்து விழுந்துகொண்டிருந்தது போன்ற உணர்வு அவனுக்கு ஒயாது இருந்தது. வழக்கமான உற் சாக வெறி அவனைவிட்டு விலகிச் செல்வது போல்