பக்கம்:இருட்டு ராஜா.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 0 93 வைக்க வேண்டியது. இது தான் ரொம்பப் பேருடைய போக்கு ஆக இருக்கு!' என்று கூறிவிட்டு முத்துமாலை வேறுபக்கம் நகர்ந்தான். அங்கே இது அவன் காதில் விழுந்தது. "பக்கத்து ஊர் கோயில் தேரு தீப்புடிச்சு எரிஞ்சது இதேமாதிரித்தான். ராத்திரி தீ நல்லாப் பத்திக்கிட்டுது. ஆட்கள் கூடி,தண்ணியை அள்ளி அள்ளிக் கொட்டினாங்க ஒருவன் சைக்கிளில் ஒடி, டவுன் தீயணைக்கும் மோட்டா ருக்குச் சொல்லி, அதுவும் வந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகு தீயை அணைச்சாச்சுன்னு சொல்லி எல்லாரும் போனாங்க. ஆனா தீக்கங்குக உள்ளே சந்து பொத்து களிலே இருந்திருக்கு. தேரு வேலைப்பாடு அப்படி. குடைஞ்சு குடைஞ்சு, கடைஞ்சு திறையிட்டு, எப்படி எப்படியோ செஞ்சிருக்காணுக. சிரமமான வேலைப்பாடு நல்ல வைரம் பாய்ந்த மரக்கட்டை. உள்ளுற கங்கு இருந்து கனிஞ்சு திரும்பவும் தீ எவ்வி எவ்வி மேலே வந் திட்டுது. தேரு பூரா குளோஸ். ஒரு ராத்திரியும், பகல்லே பாதி நேரமும் எரிஞ்சு கம்ப்ளிட்டா சாம்பலாகிப் போச்சு. தீ எப்பிடிப் புடிச்சுது, தேருலே யாரு தீ வச்சிருப்பாங்கன்னு விசாரிச்சாங்க. பிறகு விசயம் எப்படி முடிஞ்சுது தெரியுமா? யாரோ சின்னப்பையனுக தேருக்குள்ளே தேன்கூடு இருந்ததை பார்த்தாங்களாம். தேன் எடுக்க ஆசைப்பட்டாங்க. அதுக்காக புகை மூட்ட விரும்பி, ஒலைகளையும் மட்டைகளையும் கொளுத்தி தேரு ஓட்டைக்குள்ளே போட்டிருக்காங்க. தேன் கூட்டை எடுத்த பிறகு, தீ அணைஞ்சிட்டுதுன்னு எண்ணிக்கிட்டுப் போயிட்டானுக. ஆனா நெருப்பு உள்ளே இருந்திருக்கு: அது கனிஞ்சு எரிஞ்சு,தேருலேயும் பத்திக்கிட்டுது.அருமை 温#frgöf மரக்கட்டை பாருங்க. நல்லா நின்னு எரிஞ்சிருக்கும். தீ, படிக்க எவ்வளவோ காரணங்க, எவனாவது பீடி பிடிச்சிட்டு, அதை அணைக்காம வீசி எறிஞ்சிருக்கலாம்,