பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் செய்தித் தாளின் பெயரை இளம்பிறை என்று பொருள்படும் கிரெஸண்ட்" என்று மாற்றிஞர். இராணுவத்திலையேயே பார்த்து அனுபவம் பெற்ற ஹார்லி " என்ற ஒருவரைச் செய்தித் தாளின் ஆசிரியராக அமர்த்தினர். ஹார்லி உறுதியான கொள்கைகளையுடையவர். அதன் பயனைக் கண்டது அவர் நடத்திய செய்தித் தாளும், கிரெளண்ட்” செய்தித்தாளின் முதல் இதழ் 1844-ஆம் ஆண்டு, அக்டோபர்த் திக்கள், இரண்டாம் நாள்

பிறந்தது. (கசக்தி அடிகள் பிறப்பதற்குச் சரியாகக் கால் நூற் ஆண்டுக்கு-இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்பு) "புரட்சியின் தாயகமாகிய தமிழகத்தில் எழுந்தது இம்முயற்சி. காந்தி அடிகள் பிறந்த நாள் 1869-ஆம் ஆண்டு, அக்டோபர்த்திங்கள், 2-ஆம் நாள், ஹிந்துக்களின் துன்பங்களைக் துடைப்பது அச்செய்தித் தாளின் குறிக்கோளென அறிவிக்கப்பெற்றது. லட்சுமி நரசிம்முலு கிரெஸண்ட் தாளை கடத்திய காலத்தில் ரிகார்ட் என்ற பெயரால் பாதிரிமார்களால் ஓர் இதழ் நடத்தப்பட்டு வந்தது. இந்தப் பாதிரிமார் இதழுக்கு எதிராக எழுந்ததே கிரெலண்ட்’. பாதிரிமார்கள் அந்நாளில் மேற்கொண்ட தவறுகளையும் குற்றங்களேயும் அம்பலப் படுத்தும் பணியில் ஹார்லியை ஆசிரியராகக் கொண்ட கிரெஸண்ட் முழு மூச்சுடன் இறங்கியது. அதனால், ஆரம்பத்தில் கிரெஸண்டுக்குக் கெட்ட பெயரே ஏற்பட்டது. ஆனால் 
எதிர்ப்புகளையும் இடையூறுகளேயும் சமாளித்துக்கொண்டு கிரெனைட் முன்னேறியது. நிதிபதிகளும் அரசாங்க அதிகாரிகளும் கிரெலண்ட் தாளின் கண்டனங்களைத் தாங்க முடியாமல் தவித்தார்கள். அதுவரை