பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

l இரு பெருந்தலேவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின்மேல் தங்கள் கருத்தைச் செலுத்தினார்கள். சென்னைப் பல்கலைக் கழகம் அந்நாளில் சமய பேதங்களுக்கப்பாற்பட்டு, இந்திய இளைஞர்கட்கு ஆங்கிலக் கல்வியைப் புகட்டி வந்தது. அந்நிலையில் ஆண்டுதோறும் பல்கலைக் கழக மாணவர்களின் தகுதிகளை ஆராய நியமிக்கப்பட்ட பாதிரிமார்களும் அவர்கள் நண்பர்களும் மாணவகளளைக் கிறிஸ்தவ சமயக் கோட்பாடு பற்றிய கேள்வி களைக் கேட்டுத் திணறடித்தர்கள், நாட்டு மக்கள் இந்த குறைபாட்டைப் பற்றிக் கூக்குரலிட்டபோது பாதிரியார்கள், கட்டாயமாகப் பைபிளேப் படியுங்கள்; அதுவே வாழ வழி, என்றார்கள் இக்கொடுமையைக் கண்ட லட்சுமி நரசிம்முலு 1848-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் நாள் பச்சையப்பர் கல்லூரிக் கட்டடத்தில் இந்து மக்களின் மாபெருங் கூட்டமொன் றைக்க் கூட்டினர். அக்கூட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கம் இந்து மக்களின் மத விஷயத்தில் நடுவுகிலைமை காட்டுவதாகக் கொடுத்த வாக்குறுதியைச் சுட்டிக் காட்டியும், நடை முறையில் அவ்வாக்குறுதி முறியடிக்கப்படுவதை எடுத்துக் காட்டியும், பாதிரிமார்களின் மதமாற்றத் திட்டத்திற்கு அரசாங்க அதிகாரிகள் ஆதரவு அளிப்பதை எண்பித்தும், கவர்னர் மாகாணத்தின் உட்பகுதிகளில் ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதில் தயக்கம் காட்டுவதைப் புலப்படுத்தியும், அரசாங்க அலுவலகங்களில் நாட்டு மக்களுக்கு வேலை கொடுக் கப்படாத வேதனையை வெளிப்படுத்தியும், பாதிரி மார்களால் இந்து இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெருறாமல் தடை செய்யப்படுவதற்குச் சான்றுகள் தந்தும், நீதி மன்றங்கள் பாதிரிமார்