பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் மேலும், அந்த விண்ணப்பத்தில் தாள முடியாத வரிச்சுமை பற்றியும், வரி வசூலிப்பதில் காட்டப்படும் கொடுமைகள் பற்றியும், நீதிக்காக மக்கள் செலவழிக்க வேண்டியிருந்த பெருந்தொகை பற்றியும், காட்டில் நல்ல பாதைகளும் ஏரி குளங்களும் இலலாத அவலம் பற்றியும், கல்வி அறிவு பெற மக்களுக்குப் போதிய வாய்ப்புகள் இல்லாத் துயரங்கள் பற்றியும் குறிப்பிடப் பெற்றிருந்தன. அனைத்திற்கும் மேலாக, இந்தியா எந்த முறையில் ஆளப் பெற்றாலும் அந்த முறையை அவ்வப்போது இங்கிலாந்து பாராளுமன்றம் ஆய்வுக் குழுக்களளை ஏற்படுத்தி வெளிப்படையாக விசாரனனை செய்து ஆராயவேண்டு மென்றும், அப்போதுதான் மக்களுக்குத் தங்கள் குறைகளை மேலிடத்திற்கு எடுத்துக்காட்ட இயலும் என்றும், அது வாயிலாகத்தான் நாட்டில் நல் லாட்சி-குடிகளின் பழிக்கஞ்சி நடக்கும் ஆட்சிஏற்படும் என்றும் வற்புறுத்தப் பெற்றது. லட்சுமி நரசிம்முலு காட்டிய வழியில் சென்னைச் சுதேசிச் சங்கம் உருவாக்கிய இந்த விண்ணப்பம், எலன்புரோ பிரபுவால்’ 1858-ஆம் ஆண்டு,பிப்பிரவரித் திங்கள், 25-ஆம் நாள் பிரபுக்கள் சபையின் முன் வைக்கப் பட்டது. அதே ஆண்டு பிரபுக்கள் சபையில் ஆல்பி மார்லி பிரபு மான்செஸ்டர் நகரத்துக் குடி மக்கள் சார்பில் ஒரு மனுவைப் பிரபுக்கள் சபை முன்பு வைத்துச் சொற்பொழிவாற்றினர். அந்த மனுவில் அக்நகர மக்கள் இந்தியாவை ஆட்சி புரிய ஒர் அமைச்சரும் ஆலோசனக் குழுவும் இங்கிலாந்தில் நயமிக்கப்பட வேண்டுமென்றும், அந்த அமைச்சரும் ஆலோசனேக் குழுவும் இங்கிலாந்து நாட்டுப்