பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் அவர் செய்த தொண்டின் தூய்மையையும் உண்மையையும் விளக்குகின்றது. இங்கிலாந்து நாட்டுப் பேரசியரிடமிருந்து அவர் வி. எஸ். ஐ. பட்டம் பெற்ற பொழுதும் மேல் சபை உறுப்பினரான பொழுதும் நாட்டு மக்கள் அவற்றைத் தங்கள் சிறந்த பிரதிநிதி பெற்ற சிறப்பாகவே கருதினர்கள். நாட்டு மக்களுக்கு இன்னும் அதிகமாகப் பயன்படும் வேளையில் அவர் நம்மிடமிருந்து பிரிக்கப் பட்டுவிட்டார். பற்றற்ற உள்ளத்தோடும் அடக்கத் தோடும் பணிபுரிந்தவர் லட்சுமி நரசிம்முலு, கூர்ந்த அறிவும் அருள் கனிந்த வாழ்வும் படைத்தவர் லட்சுமி நரசிம்முலு கல்வி வளர்ச்சிக்காக முன் அணியில்நின்று பாடுபட்ட பெருந்தகை அவர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதை எல்லோரும் உணர்கின்றனர்.” இவ்வாறு முற்றிலும் அயலாராகிய நார்ட்டன் பெருமகனார் வாயிலாகப் புகழ் பெற்ற பெருமை அந்நாளில் லட்சுமி நரசிம்முலு ஒருவருக்கே கிடைத்த தனிச் சிறப்பாகும். தம் அறுபத்திரண்டாம் வயதில் மண்ணுலக வாழ்வை நீத்த பூரீ லட்சுமி நரசிம்முலு, வாழ் வாங்கு வாழ்ந்த மனிதகுல மாணிக்கம்; ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக்காக ஒயாது உழைத்த உரவோர்; 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராயினும், பகுத்தறிவுக் கொள்கை படைத்த பண்பாளர்; ஆயினும், கலையுலும் ஒழுக்கத்திலும் கடவுள் உணர்ச்சியிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்; அயலார் ஆட்சியை எதிர்த்து அறப் போர் புரிந்த அண்ணல்; நாட்டில் பொருளாதாரம் 3