பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் சீர்பெற அல்லும் பகலும் பாடுபட்ட செம்மல்; பெண் கல்வியில் பெருவிருப்பம் கொண்ட பெரியார்; தம் சொந்தப் பணத்தைச் செலவழித்துப் பெண்களுக் கான பள்ளிக்கூடம் பலவற்றை நிறுவித் தாய்க்குலம் அறிவொளி பெறச் செய்த தகைமை சான்ற தலைவர்; விதவைகள் மறுமணத்தையுங்கூட வெறுப்பின்றி ஆதரித்த செயல்வீரர்; உழைபாளர்களுக்கு உற்ற நண்பராய்த் திகழ்ந்த உத்தமர்; மொழி இன வேறுபாடுகலையும் பண்பாடும் வளரக் கடைசி மூச்சு உள்ள வரை காசையும் உழைப்பையும் ஒரு சிறிதும் :மிச்சம் வைத்துக்கொள்ளாமல் காணிக்கையாக்கிய கருணை வள்ளல்; எத்தனையோ இளேஞர்கள் கல்வி ஒளி பெற, எவ்வளவோ பொருளை அள்ளி இரைத்த ஏந்தல்; சுருங்கச் சொன்னால், நாட்டின் பல்வேறு உயர்வுகளுக்காகவும் தம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் மகிழ்வோடு உடைமையாக்கிய மாமுனி வர் லட்சுமி நரசிம்முலு எனலாம். அவர் வீரவாழ்வு ஒரு பெருங்காவியம் கடவுளரும் போற்ற வேண்டிய அக்காவிய வாழ்வை, சுதந்தர இந்தியாவின் குடிமக்கள்-சிறப்பாகச் செந்தமிழ் நாட்டு மக்கள்.-நன்றியோடு போற்றிப் பயன் கொள்வார்களாக! அடிமை இந்தியாவுக்கு ஒரு லட்சுமி நரசிம்முலு போதும்; ஆனால் சுதந்தர இந்தியாவுக்கு ஆயிரம் ஆயிரம் லட்சுமி நரசிம்முலுகள் தேவையல்லவா?