உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii முதற்பெருந்தமிழர் எ ன் ற கட்டுரையில் பெரும்பேராசிரியர் டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் என் சரித்திரத்'திலிருந்து விரிவாக மேற்கோள்களே எடுத்துக்காட்ட மனமுவந்து அனு மதி வழங்கிய ஐயரவர்களின் பேரர் உயர்திரு. க. சுப்பிரமணிய ஐயர் அவர்கட்கு யான் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுக்கு அழகியதோர் அணரி க் து ைர வழங்கி வாழ்த்தியுள்ள கலைமகள் ஆசிரியர் பெருங் தகை உயர்திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கட்கு என் பணிவார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரியன. வழக்கம் போல இந்நூலேச் செப்பம் செய்து உதவிய மகாவித்துவரன் உயர்திரு. மே. வீ. வேனு கோபாலப் பிள்ளை அவர்கள் அருட்டிறத்தை என்றும் மறவேன். காந்தி அடிகள் வார வெளியீடாக வெளிவரும் இந்நூலைத் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் போற்றி என்னே மேலும் மேலும் இத்துறையில் ஊக்கு வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். வாழிய செந்தமிழ் ! வாழ்க காந்தியம்! ந. சஞ்சீவி 8-10-'58