பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பானால்

55

டைக்காரர்களைத் துரத்திக் கொண்டு வரும் ஓநாய்கள் என்று கூறவேண்டும் என்பர். அரசர் பெருமானின் அடிவருடிகள்! கூறட்டுமே! அதனால் என்ன!! இப்போது வேண்டியது இரத்தம்!— என்று கூச்சலிடுகிறது, பெருங்கூட்டம்.

அந்தப் பெருங்கூட்டம் புடை சூழத்தான்,பவனி வருகிறான், மன்னன், குடும்பத்துடன் பீரங்கி வண்டிகளை இழுத்து வருகிறார்கள்;அதன் மீது நின்றுகொண்டு, ஆர்ப்பரிக்கிறார்கள்——பெண்கள்!

துப்பாக்கி தூக்கிக்கொண்டு வருகிறார்கள்! அதன்முனையில் ரொட்டித்துண்டு, செருகப்பட்டிருக்கிறது!

செடி கொடிகளைப் பறித்தெடுக்கிறார்கள்; பீரங்கி வாயிலே திணிக்கிறார்கள். இரண்டு இலட்சம் இருக்கும் என்கிறார்கள், பெருந்திரள் கண்டு!

இவ்வளவு பேரும், நமக்கு விரோதிகள்!— என்று எண்ணி நடுங்குகிறாள். மன்னனை மணந்தவள்! “இவ்வளவு பேரும், என் குடிமக்களாக இருந்தவர்கள்”!— என்று எண்ணி ஆயாசப்படுகிறான் மன்னன்.

“முன்பெல்லாம், இந்தக் கூட்டத்தவர் வந்தால், “அப்பாவின் ஆட்கள்” அடித்துத் துரத்துவார்களே. இப் போது மட்டும் ஏன், இவர்கள் கூவுகிறார்கள். அப்பா தலை கவிழ்ந்தபடி இருக்கிறார்!” என்று எண்ணித் திகைக் ிறான், அழிவை வரவழைத்துக் கொண்ட அரசனின் மகன்!

“நள்ளிரவில் புகவேண்டும்; குடித்துக் கூத்தாடி, அலுத்துப் படுத்துக் கிடப்பான், மரக்கட்டைபோல! கட்டாரியால் ஓங்கி, மார்பில் குத்தவேண்டும்! உயிர் போகுமட்டும்!”— என்று நண்பனிடம், அரசனைப்பற்றி ஆத்திரத்தோடு பேசியவன், இருந்திருக்கக் கூடும், அந்த ஊர்வலத்தில்! “ஏ! முட்டாள் ! நீ ஒரு யோசனை சொன்னாயே, யாருமறியாமல், அரசனைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று! இதைப் பாரடா, ஏமாளி! இதைப் பார்! இது ஆகுமா அது!!”