பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

பெரிய தெரு முனையைத் தாண்டித் திரும்பினேன். கொஞ்ச நேரம்தான் நடந்திருப்பேன். ஏதோ உற்சாக நினேவோடு என்னை மறந்த நிலையிலே நடத்திருப்பேன் போலிருக்கிறது. என் பின்னால் ஒரு கார் வந்து சடக்கென பிரேக் போட்டு நின்றதும்தான் எனக்கு விழிப்பு வந்தது. அடடா, ரோட்டிலே கார் வருவது கூடத் தெரியாமல் - நான் எண்ணி முடிக்கவில்லை. என் தேகமும் உள்ளமும் உதறலெடுத்து நடுக்கின ஒரு இம்மி தவறியிருந்தால் என் கதி என்னாகியிருக்கும் என்ற அதிர்ச்சி என்னை ஆட்டியது...இப்போது எண்ணிப் பார்க்கையில், வேணுமென்றே அந்தக் கார் மெதுவாக வந்து என்னே மோதுவது போல் நின்றிருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படித் தானிருக்க வேண்டும். திட்டமிட்டுச் செய்த காரியம்தான் அது. ஆமாம்...எனக்கா பயமானால் பயம் இப்படி அப்படி என்று சொல்ல முடியாது. அந்தக் காரிலிருந்து இறங்கிய ஆளைக் கண்டதும் எனக்குக் கொஞ்சம் தெம்பு பிறந்தது. அது அவர்தான் - நம்ம பள்ளிக்கூடத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, விழாவிற்கு வந்திருந்து என்னை ரொம்பவும் பாராட்டினாரே, அவர்தான். ஆமாம். ஊரடி பங்களாவின் சொந்தக்காரர்தான். அவா் அன்பாகப் பேசினார், இபபடியாம்மா ரோட்டில் நடப்பது ; கார் உன்னைத் தள்ளிக் கொன்றிருக்குமே என்றெல்லாம் சொன்னார். எவ்வளவு நல்ல மனிதர் என்று நினைத்தேன். காரிலே ஏறிக்கொள் பவானி: வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்றார். என் தேகத்தின் உதறல் தணியவில்லை. அந்தத் தெருக்கோடியில்தான் வீடு இருந்தது. என்றாலும் என்னால் அவ்வளவு துாரம் நடப்பது கூடச் சிரமமாகயிருக்கும் என்றே அந்நேரத்தில் தோன்றியது. அதனால் அவர் காரில் எறி உட்கார்ந்தேன். பின் வலீட்டில்தான். அவரும் பின் வீட்டில்தான் அமர்ந்தார். கார் புறப்பட்டதும், அவர் கைக்குட்டையை எடுத்து விளையாட்டாகச் சுற்றுவது போல் சுழற்றிக் கொண்டிருந்தார்.