இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
92 இருளும் ஒளியும்
வெளியிடுவதை அநாகரிகமாகக் கருதுகிருர்களோ என்னவோ உன் தோழிகள்!'
'தங்கம்! நீ ரொம்பவும் புத்திசாலி. சேற்றிலே மலரும் தாமரையைப்போல உன்னை நினைக்கிறேன் தங்கம். ஏதாவது அசட்டுப் பிசட்டென்று பயந்துகொண்டு செய்துவிடாதே. உனக்குப் பிடிக்காதவரை மணந்துகொள்ளாதே. தெரியுமா?" என்று விரலை ஆட்டிக் கண்டிப்புடன் எச்சரித்தாள் ஸரஸ்வதி.