பக்கம்:இருளும் ஒளியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இருளும் ஒளியும்

"அப்பா! இவ்வளவுதான்? என்னவோ சுயம்வரத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறமாதிரி அல்லவா வெட்கமும், நாணமும் நடுவில் வந்துவிடுகிறது? என்னவோ என்று பார்த்தேன். வரட்டுமே. நீயுந்தான்் வாயேன்' என்று அழைத்தான்் ரகுபதி இருவரையும்.

தங்கம் சந்தோஷ மிகுதியினல் மறுபடியும் மாடிப்படிகளில் "தடதட வென்று வேகமாக இறங்கிள்ை. இடுப்பின் கீழே புரளும் பின்னல், இப்படியும் அப்படியும் ஆடி அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தான்் ரிகுபதி.

' என்ன அத்தான்் பார்க்கிருய்? தங்கம் இப்படி ஒடுகிருளே என்றுதான்ே பார்க்கிருய்? அந்தப் பெண் எதையும். எந்த வேலையையும் இப்படித்தான்் ஒடி ஒடிச் செய்கிருள். பாவம்-' என்று ஸரஸ்வதி கூறிவிட்டு அங்கிருந்து கீழே சென்ருள்.

சாயந்தரம் நாலு மணிக்கு மூவரும் கச்சேரி கேட்பதற்கு நகரத்துக்குப் புறப்பட்டார்கள். ஸரஸ்வதி ஆரஞ்சு வர்ணப் புடைவையும். கறுப்பு ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தங்கம் மருதாணிச் சிவப்பில் ஸரஸ்வதியின் பட்டுப் புடைவையை உடுத்தி இருந்தாள். சங்கு போன்ற கழுத்தில் கரியமணிச்சரம் இரட்டை வடம் பூண்டு, நெற்றியில் பிறை வடிவத்தில் திலகமிட்டிருந்தாள் தங்கம். கைகளில் "கலகல வென்று ஒலிக்கும் சிவப்புக் கண்ணுடி வளையல்கள். தேர்ந்த ஒவியனின் சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த பாவையாகத் தோன்றினுள் அவள். 'அதிக அழகு அதிருஷ்டத்தைக் குறைத்துவிடும்' என்று யாரோ சொல்லி யிருப்பதை நினைத்துப் பார்த்தான்் ரகுபதி. 'அதான்் இந்தப் பெண் இப்படி ஏழ்மையில் வாடிப்போகிருளோ' என்றும் எண்ண மிட்டான்.

ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்' என்று ஸ்வர்ணம் கூறியதும் ஸரஸ்வதி, ' என்ன அத்தான்்! நீ ரெடி'தான்ே?" என்று கேட்டாள்.

இதுவரையில் தங்கத்தையே வெறித்துப் பார்த்துக்கொண் டிருந்த ரகுபதி திடுக்கிட்டுத் திரும்பி, 'ஒ' என்று கூறிவிட்டுப் புறப்பட்டான். i. i.

"போகிறபோது நடந்து போய் விடலாம். வரும்போது இருட்டிவிடும். பஸ் பிடித்துதான்் ஆகவேண்டும். என்ன சொல்கிருய் தங்கம்?' என்று கேட்டான் ரகுபதி.