உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மாமியார் நாட்டுப்பெண்

இதேமாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை விட்டார் பெண் பார்க்க வரப்போகிரு.ர்கள் என்று அறிந்து ஒவ் வொருவரும் ஒடி ஆடிக் குது கலத்துடன் வேலை செய்துகொண் டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒருதரம் தி லை க் கண்ணுடியின் எதிரில் நின்று தன்னைக் கவனித்துக் கொள்வதில் முனைத்திருந்தாள். சாவித்திரியின் தாய் மங்களம் - வழக்கமாகத் தன் மாமியாருக்குப் பயப்படுகிறவள் கூட - அன்று தான்ும் கூடிய விரைவில் மாமியார் ஆகப்போ கிருேம் என்கிற பெரு மிதத்தில், சற்று இரைந்தே பேசிக்கொண் டிருந்தாள். சாவித்திரியின் தங்கை சீதாவுக்குத்தான்் வீட்டிலே அதிகம் வேலைகள் காத்துக்கிடந்தன. சரசரவென்று மாடிக்கும் கீழுக்கும் ஹாலுக்கும் காமரா அறைக்குமாகத் தன் மேலாடை பறக்கத் திரிந்துகொண் டிருந்தாள் அவள்.

பெண்ணுக்குக் கல்யாண மென்றால் தாய்க்குத்தான்் அதில் பெருமையும் பங்கும் அதிகம் என்று கூறலாம். பிள்ளை வீட்டார் வந்து சாவித்திரியைப் பார்த்துத் தம் சம்மதத்தை அறிவிப்பதற்கு முன்பே மங்களம் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசை களைப்பற்றித் தன் கனவுர் ராஜமையரிடம் பேசினள்.

'மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் பேர்டுவ தாகச் சொல்லிவிடுங்கள். இப்போது சாவித்திரிக்குக் கணிசமாக நாலு வளையல்கள் செய்தாக வேண்டும். மோதிரச் செலவையும் சமாளிக்க முடியாது. அப்புறம் சம்பந்திகள் எதிரில் வழவழ என்று பேசிவிடாதீர்கள்' என்ருள் மங்களம் காபியை ஆற்றிக் கொண்டோ

ராஜமையர், 'ஹ-ம். . ஹாம். . ' என்று தலையை ஆட்டினர். அவருக்குப் பதில் சாவித்திரியின் தமையன் சந்துரு பேச ஆரம்பித்தான்்: 'உன் பெண்ணுக்குத்தான்் ஒரு ஜதை வளையல்கள் குறைவாக இருக்கட்டுமே அம்மா. மாப்பிள்ளைக்கு இப்பொழுதே மோதிரம் போட்டுவிடலாம். நாலு பேருக்குத்