உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுடைய குற்றம் 145

சாவித்திரியின் மனம் ஒரு பெரிய புதிர். அவளுடைய மனத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா? கணவனைப் பார்த்து. அவனுடன் சென்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிருளா?' என்பதை யாராலும் அறிய முடியவில்லை. பெற்ற தாயிடமும், உடன்பிறந்த சகோதரியிடமுமே அவள் மனத்தை ஒளித்தாள் என்றால் வேறு யார் அவளே அறிய முடியும்? அவள் மனம் உற்சாகமில்லாமல் இருந்து வருவதை மட்டும் சீதா கண்டுபிடித்துவிட்டாள். வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. கூடப் படித்த சிநேகிதிகளிடம் அதிகம் பேசுவதில்லை. அவர்களாகத் தேடி வந்தாலும், அவள் முகங்கொடுத்துப் பேசாவிட்டால் தாமாக விலகிச் சென்று விடுவார்கள்.

அன்று பிற்பகல் கூடத்தில் படுத்திருந்த தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான்். வாஞ்சையுடன் தாயின் கரங் களைப் பிடித்துக்கொண்டு, 'ஏனம்மா! தீபாவளிக்கு முன்பு உடம்பு தெம்பாகச் சற்று நடமாடிக்கொண் டிருந்தாயே. மறுபடியும் படுத்துவிட்டாயே!' என்று விசாரித்தான்்.

மங்களத்தின் கண்களில் கண்ணிர் பெருகியது.

"ஆமாம் அப்பா! மாப்பிள்ளை வருவான், சாவித்திரியை அழைத்துப்போவான்’ என்கிற நம்பிக்கையே டானிக் மாதிரி உடம்புக்கு வலுவைத் தந்தது. அவன் வரவில்லை என்றதும் மனம் சோர்ந்துவிட்டது. சந்துரு! இந்த நிலையில் நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. எனக்கு ஒருவரை ப்பற்றியும் கவலையில்லே. சீதா புத்திசாலி. பிறர் சுபாவம் தெரிந்து பழகிக்கொள்வாள். கண்டிப்பாகப் புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கிவிடுவாள். நல்ல குணமுள்ள பெண்ணுக நீ கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாயாளுல் அவள் உன் தகப்பனரைக் கவனித்துக்கொள்வாள். குடும்பம் செழித்துப் பெருகும்போதே மஞ்சளும், குங்குமமுமாக நான் போகிறதில் எனக்குக் கவலையில்லை. சாவித்திரி வாழாப் பெண்ணுக இருந்து விடுவாளோ என்று என் ஹிருதயம் அலறித் துடிக்கிறது. கணவனிடம் கண்ணை மூடிக்கொண்டு பக்தி செலுத்தும் என் வயிற்றில் இந்தப் பெண் எங்கேயிருந்து வந்து பிறந்தாள் என்று மனம் கிடந்து தவிக்கிறது' என்று நா தழுத ழுக்கக் கூறிஞள்

மங்களம்.

இ. ஒ. 10