154 இருளும் ஒளியும்
ஏரிக்கரைக்குத் தங்கம் போனல் அங்கே அவனும் விரைந்தான்். கிராமத்து வாலிபர்களைச் சுட்டுப் பொசுக்கும் தங்கம், ரகுபதி யோடு தனித்து உரையாடுவதை அவர்கள் பார்த்தால் கம்மா விடுவார்களா?
ஒரு நாள் அதிகாலேயில் ஏ யில் குளித்துவிட்டுத் திரும்பும் தங்கத்தைக் கோவிலில் சந்தித்தான்் ரகுபதி. குடலே நிறையத் தங்க அரளிப் புஷ்பங்களைப் பறித்து நிரப்பிக்கொண்டு வந்து நின்றிருந்தாள் தங்கம். பொழுது இன்னும் நன்ருக விடியவில்லை. அவளுக்கு மனசிலே ஆயிரம் குறைகள் உண்டு. அதைக் கோவிலில் வந்து தெய்வத்தினிடம் முறையிட்டுக்கொள்வது அவள் வழக்கம். அதைக் கலைப்பதற்கு வந்த ரகுபதியை அவள் அங்கே சந்திக்க விரும்பவில்லை.
என்ன அத்தான்்! இவ்வளவு காலையில் வந்துவிட்டீர்கள்!' என்று சொல்லாமல் சொல்லி விளங்க வைக் தாள் தங்கம்.
'வந்துவிட்டேன்! வரக்கூடாதா தங்கம்? உன்னைப் பார்ப்ப தற்காக வந்திருக்கிறேன்.'"
"வேடிக்கைதான்்! பொழுது விடிந்து பொழுது சாய்வ தற்குள் வீட்டிலே பல முறைகள் பார்ப்பவளைக் கோவிலில், அதிசயமாகப் பார்க்க வந்தாராமே!" என்று வியந்தாள் தங்கம். இருந்தபோதிலும் பொறுமையை இழக்காமல், 'வீட்டிலே பேசிக்கொண்டால் போயிற்று. அதற்காக என்னே இங்கே தேடி வர வேண்டுமா என்ன? இது கிராமாந்திரம் அத்தான்்! உங்கள் நகரத்திலே குற்றங் குறைகள் யாருடைய கண்களிலும் அவ்வள வாகத் தென்படாது. குற்றத்தைக்கூட ஒரு நாகரிகம் என்று நினைத்து ஒதுங்கிப் போவார்கள். இங்கே அப்படி இல்லை: ஒன்றுக்குப் பத்தாகக் கதை கட்டிவிடுவார்கள். ஆமாம். . . ...!" ரகுபதி அவளைப் பார்த்து அழகு காட்டும் பாவனேயாக, "ஆமாம்!' என்ருன்.
'உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேன். நன்ருகப் பேசுகிருயேடி அம்மா நீ! பெண்களே பேச்சில் வல்லவர்கள் என்று நினைக்கிறேன்!' என்று கூறிவிட்டு அவள் கையிலிருந்த .புஷ்பக் குடலையைப் பற்றி, இங்கே கொண்டு வா அதை. நான் எடுத்து வருகிறேன். தோளில் ஈரத் துணிகளின் சுமை அழுத்து வது போதாது என்று கையிலே வேறு!' என்று கூறிக் குடலையை வாங்கினன்.