நான் ஏழைப் பெண் 153.
யில்லை அம்மா. அது துரோபதை மாதிரி தன்னைத்தான்ே காப் பாத்திக்கும். அஞ்சு புருசன் இருந்தும் துரோபதை அம்மாளே பாரம்மா காப்பாத்திளுங்க? நம்ப தங்கம்மாவுக்கு அந்தச் சாமர்த்தியம் இருக்குது. அர்ச்சுன ராஜாமாதிரி நல்ல புருசன அதுக்குக் கிடைப்பாங்க. கவலைப்படாதிங்க' என்று அலமுவுக்கு ஆறுதல் கூறுவார்கள்.
சிப்பியிலே நல்முத்து விளைகிறது. பட்டுப் புழுவில் அதி அற்புதமான பட்டு உற்பத்தியாகிறது. சேற்றிலே செந்தாமரை மலர்கிறது. ஈசன் வண்ண மலர்களில் மட்டும் பதுவைத் தேக்கி வைக்கவில்லை. அழகு விளைவதற்கு நல்ல இடங்கள்தாம் வேண்டும் என்பதில்லை. சமதிருஷ்டியுடன் அவன் எல்லா இடங்களிலும் அழகைத் தேக்கி வைத்திருக்கிருன். படித்த பெண்களுக்கு இல்லாத சில அரிய பண்பாடுகள் தங்கத்தினிடம் நிரம்பி இருந்தன. எல்லோரையும் மரியாதையாகக் கெளரவிக்கத் தெரியும் அவளுக்கு; நாலு பேரை மதித்து நாலு வார்த்தைகள் பேசத் தெரியும்; செய்துவிட்ட குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் பண்பும் அவளுக்குத் தெரியும். பிறவியுடன் அறிவு பிறந்துவிடுகிறது. அதை வளர்க்கத்தான்் கல்வி அறிவு பயன் படுகிறது. சிறந்த பண்பாட்டைப் பெண்கள் பெற அதற்கேற்ற குடும்பச் சூழ்நிலை அவசியமாகிறது. உள்ளத் துாய்மையும், அகந்தையற்ற தன்மையும் உள்ள பெரியவர்களிடை குழந்தைகள் வளர்ந்து வந்தால் அவர்கள் குணத்தை இவர்களும் அடை கிருர்கள். போலிக்கெளரவமும், ஒருவரையும் மதியாத சுபாவமும் நிறைந்த கூட்டத்தில் வளரும் குழந்தைகள், அந்த மனப்பான் மையைத்தான்் வளர்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி எங்கோ விதி விலக்காகச் சிலர் இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இப்படித்தான்் இருக்கிறது.
தங்கத்தின் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அவ்வளவு கண்டிப்பும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் ரகுபதி அவளிடம் சகோதர அன்புடன் பழகி வருவதாக நினைத் திருந்தாள். வரவர அவன் பித்தனைப்போல் நடப்பதை அறிந்து பயந்தாள். தங்கத்தைத் தனியாகச் சந்தித்துப் பேசவேண்டும் என்கிற அவசியம் ரகுபதிக்கு இல்லை. அவளிடம் அவன் அந்த ரங்கமாகச் சம்பாஷிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லோர் எதிரிலும் தாராளமாகப் பேசலாம். ஆனால், ரகுபதி அவளிடம் தனித்துப் பேச பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டான்.