உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இருளும் ஒளியும்

டாமா? நடுங்கிச் செத்ததெல்லாம் போதாதா?' என்று கேட்டாள்.

'பார்த்தாயா மங்களம், அப்பொழுதே சொல்லவேண்டும் என்று இருந்தேன். குழந்தைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏகப் பட்டதாகத் தர்க்கம் பண்ணிக்கொண் டிருந்தார்கள். அவர்கள் எதிரில் பேசவேண்டாம் என்று பேசாமல் இருந்துவிட்டேன். பிள்ளைக்கும். அவனைச் சேர்ந்தவர்களுக்கும் சாவித் திரியை மிகவும் பிடித்துவிட்டதாம். என் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டுவிடு' என்றார் ராஜமையர்.

மங்களத்துக்கு இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்தது. 'சின்ன வயசிலிருந்தே செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டீர்கள் உங்கள் பெண்னே! நான் என்ன கேட்கிறது அவளை? அவள் ஏதாவது என்னை மதித்துப் பதில் சொல்லுவாளா? நீங்களே கேளுங்கள். முதலில் அவளுக்குப் பிடித்தாகவேண்டும். அப் புறம் உங்கள் அம்மாவுக்குப் பிடிக்கவேண்டும்

மங்களம் இந்த வார்த்தைகளை உரக்கவே சொன்னுள். பாட்டியோ பலகார மெல்லாம் முடிந்து கூடத்தில் ஊஞ்சலில் படுத்து அரைத்துாக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆகவே மாமியா 6. ப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் நிஷடுரமாகப் பேச முடிந்தது.

'நம் காலத்தைப்போல் இல்லையே. பெண் பார்ப்பதற்குப் பிள்ளை வீட்டார் போவார்களே தவிர, பிள்ளையை அவ்வளவாக அழைத்துப்போகும் வழக்கம் இருந்ததில்லை. பெரியவர்கள் பார்த்துச் செய்து வைத்த கல்யாணங்களில் நூ ற் றி ல் தொண்ணுாறு அழகாகவே அமைந்தன. பிள்ளைக்குப் பதினைந்து வயசும் பெண்ணுக்கு ஒன்பது வயசும் என்று பார்த்துச்செய்த கல்யாணங்களில் ன் மு ப து வயசுவரையில் தம்பதிகள் அன்யோன்யமாக வாழ்ந்திருக்கிரு.ர்கள். இந்தக் காலத்தில் மனசுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஆயிரம் தடவை பெண், பிள்ளை சம்மதத்தைக் கேட்டு நடத்தும் கல்யாணம் நூற்றுக்குத் தொண்ணுாறில் "நான், நீ" என்ற சச்சரவுடன் வாழ்க்கை நடத்து கிரு.ர்கள்' என்று ராஜமையர் கூறிஞர்.

அப்பொழுது சமையலறைப் பக்கம் வந்த சந்துரு தாயைப் பார்த்து, 'ஏன் அம்மா! நீ அப்பாவை முதலில் பார்த்துத்தான்் கல்யாணம் பண்ணிக்கொண்டாயா?' என்று விஷமச் சிரிப்புடன் கேட்டான்.