24 இருளும் ஒளியும்
உள்ளவர்கள் எல்லோரும் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்கள். -
'வாடி அம்மா பாலம்! வா அப்பா ராமு' என்று ராஜமையர் தங்கையையும் அவள் புருஷனையும் வரவேற்ருர்,
பழக்கம் இல்லாத புது மனிதர்களைப் பார்த்து பத்மா. தாயின் அருகிலேயே நின்றுகொண் டிருந்தாள். 'பத்மாதான்ே
இது? வாடி என் கண்னே' என்று பாட்டி ஆசையுடன் பேத்தியை இழுத்துக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை வருடிஞள்.
'மன்னி! நிதான்் என்ன இவ்வளவு கிழவியாகிவிட்டாயே? மாப்பிள்ளை வருவதற்கு முன்னுடியே கிழமாகப் போய்விட்டாயே மன்னி!' என்று பாலம் சந்தோஷத்தில் சொன்ன வார்த்தை களேயே திருப்பித் திருப்பிச் சொன்னுள்.
இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷ மிகுதியில் நேரம் போவது தெரியாமல் நின்றுகொண்டே பேசினர். நாத்தனருடன் எவ்வளவோ பேசவேண்டுமென்று நினைத்திருந்த மங்களம் பிரமித்துப்போய் பாலத்தையே பார்த்துக்கொண் டிருந்தாள்.
"'என்ன அம்மா, அத்தையை விழுங்கிவிடுவதுபோல் பார்க் கிருயே! அத்தை எந்தக் க ை-யில் டில்லியில் அரிசி வாங்கிளுள் என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதா உனக்கு?' என்ருன் சந்துரு.
"ஆமாம். ஆமாம்: பாலம் கொஞ்சம் பருத்துத்தான்் இருக் கிருள்' என்று தலையை ஆட்டிப் பிள்ளை கூறுவதை ஆமோதித்தார் ராஜமையர்.
'சரி. சரி. மணி ஆகிறது. அவாள் எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சோ? எழுந்து ஸ்நானம் செய்யப் போகட்டும்' என்று கூறி மங்களம் உள்ளே சென்ருள்.
சாப்பாடு முடிந்த பின்னர் பாலம் சாவித்திரிக்காக வாங்கி யிருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், புடைவைகளைப் பார்வை. யிட்டாள். வெள்ளியில் வாங்கியிருந்த குடத்தைப் பார்த்து விட்டு, "ஆமாம் மன்னி குடம் பித்தளையில் வாங்குவதுதான்ே? வெள்ளிக் குடத்திலா சாதாரணமாக நாம் ஐலம் கொண்டு வருகிருேம்?' என்று கேட்டாள். ===
'அதென்னவோ அம்மா! பெட்டியிலே தூங்குவதற்காக எத்தனை புடைவைகள், நகைகள், பாத்திரங்கள் செய்தாக வேண்டுமோ? அன்ருட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்