1 <+
சீதாவின் உபதேசம்
அன்று சனிக்கிழமையாதலால் ராஜமையர் காரியாலயத்தி லிருந்து பகல் ஒரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார். காசிக்குத் தன் பெண் பாலத்துடன் சென்றிருந்த அவர் தாயாரும் ஊரிலிருந்து முதல் நாள்தான்் வந்திருந்தாள். இடை வேளைச் சிற்றுண்டிக்கு அப்புறம் கூடத்தில் உட்கார்ந்து வடநாட் டைப்பற்றிப் பாட்டி கூறுவதைக் கேட்டுக்கொண்டு. இடை யிடையே அவளேக் கேலி செய்துகொண் டிருந்தார்கள்.
'பாட்டி! காசிக்குப் போனல் ஏதாவது அவரவர் களுக்குப் பிடித்த பண்டத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லுகிருர் களே. நீ காப்பியை விட்டுவிட்டாயா பாட்டி? " என்று சீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
'சே. . சே. . காப்பியை இன்னும் ஸ்ட்ராங் காகச் சாப் பிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டு வந்திருப்பாள் பாட்டி!' என்று சந்துரு கேலி செய்தான்்.
'போடா அரட்டை! கொய்யாப் பழத்தையும், பாகற்
காயையும் விட்டுவிட்டேன்' என்று பேரன், பேத்திக்குப் பதில் கூறிஞள் பாட்டி.
'அடி சக்கை! தினம் தினந்தான்் கொய்யாப்பழமும், பாகற்காயும் நாம் சாப்பிடுகிருேம்? சரியாகத்தான்் பார்த்துப் பொறுக்கி எடுத்திருக்கிருய்?' என்ருன் மீண்டும் சந்துரு.
காயும், பழமும் விடவேண்டும் என்பது ஒன்றும் சாஸ்திரம் இல்லை. நமக்கு இருக்கும் பலவித ஆசைகளில் எதையாவது துளி அந்தப் புனித rேத்திரத்தில் விட்டுவர வேண்டும். ஆசா பாசங்களை ஒடுக்கவேண்டும் என்று பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிரு.ர்கள்!' என்றார் ராஜமையர்.
சற்று ஒதுப்புறமாக உட்கார்ந்திருந்த மங்களம், 'ஏதாவது அரட்டை வேண்டுமோ இல்லையோ? சாவித்திரியிடமிருந்து கடிதம் வந்து பத்து தினங்களுக்குமேல் ஆகிறது. யாரும் ஒரு வரி பதிலே போடவில்லை. உன்னை எழுதச் சொல்லி எத்தனை