:64 இருளும் ஒளியும்
பெண்ணு அவள் - பாட்டியின் சொல்லேப் பொறுக்கமுடியாமல் சந்துரு சற்று இரைந்து 'சரி. சரி. எல்லாவற்றையும் கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்து விசாரிக்கலாம். வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு நிற்கவேண்டாம்' என்று கூறிஞன்.
சாப்பிடும் கூடத்தில் சாவித்திரியின் பக்கத்தில் தோ வந்து உட்கார்ந்து 'உனக்கும். அத்திம்பேருக்கும். ஏதோ கடல் போல இருக்கிறது! தமிழ்க் கவிதைகளையும், தலைவன், தலைவி கனடல் பாடல்களையும் படித்துவிட்டு அத்திம்பேர் உன்னிடம் கடலே ஆரம்பித் திருக்கிருர்போல இருக்கிறது! நடுவில் யாராவது தாது செல்வதற்கு இருந்திருந்தால் நீ இங்கே வந் திருக்கமாட்டாய் இல்லையா சாவித்திரி? அப்படித்தான்ே?" என்று குறும்பு த வழக் கேட்டாள்.
'நாளேக்கு உனக்கு வரப்போகிற புருஷன் உன்னைக் கன்னத்தில் நாலறை அறைந்து வீட்டைவிட்டு வெளியே தள்ளிளுல் நீ அதை "வேடிக்கை னனு நினைத்துக்கொண்டு அழகாகக் குடித்தனம் செய்துகொண்டு இருப்பாய்' என்று பாட்டி உரக்க இரைய ஆரம்பித்தாள், தன் சின்னப் பேத்தியைப் பார்த்து.
சீதாவுக்கு உண்மையிலேயே தன் தமக்கை மீது கோபம் ஏற்பட்டது.
கணவன் அடிக்கிருன் என்றே வைத்துக்கொள்வோம். வீட்டைவிட்டுத் துரத்துகிருன் என்றே வைத்துக்கொள்வோம். விடு என்பது கணவன். மனைவி இருவருக்கும் சொந்தமான இடம். இதிலிருந்து ஒருவரையொருவர் வெளியே போகச்சொல்ல யாருக்கு அதிகாரம்? அப்படியே அவன் வற்புறுத்திலுைம், "சீ. சி. உங்களேயே கதி என்று நம்பி வந்திருக்கும் என்னை, என் வீட்டைவிட்டு வெளியேற்ற உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? பேசாமல் இருங்கள். என் வீட்டுக்கு நான்தான்் அரசி' என்று கூறிவிட்டு நான் உள்ளே போய் விடுவேன். காலப் போக்கில் எவ்வளவோ மன ஸ்தாபங்கள் கரைந்து போய்விடுகின்றன. இதைத்தான்ே அன்னை கஸ்துாரிபாயும் நமக்குப் போதிக்கிருர்?' என்று சீதா ஆவேசத் துடன் பேசிள்ை. அவள் அப்பொழுது சந்துரு லேப்ரரியிலிருந்து வாங்கிவந்த காந்திஜியின் 'சத்திய சோதனை யைப் படித்துக் கொண்டிருந்தாள்.