70 இருளும் ஒளியும்
பாடுவாள். இப்பொழுது சாதாரண ஸரஸ்வதியாக இருக்கிறவள் அப்பொழுது கான ளரஸ்வதியாகவோ, இசைக் குயிலாகவோ மாறிவிடுவாள் இல்லையா? 'நீ யார்? எந்த ஊர்?' என்று உன்னைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பாள். இல்லாவிடில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு 'நமஸ்காரம்' போட்டுவிட்டுக் காரில் போய் ஏறி உட்கார்ந்து-காண்டாலும் கொள்வாள்!" என்ருள் இன்ஞெருத்தி.
அவள் பேசி முடித்ததும் எல்லோரும் கலி சென்று சிரித் தார்கள்.
அப்படியெல்லாம் பண்ணை மாட்டாள் ைர ஸ் வ. தி. இன்றைக்கு மாத்திரம் என்ன, அவள் பெரிய பாடகி ஆவதற்கு வேண்டிய தகுதி இல்லையா? குடத்துள் விளக்காக இருக்கிருள். தன்னைப்பற்றி அதிகம் வெளியிலே சொல்லிக்கொள்ளவே அவளுக்கு வெட்கம்!' - முதலில் பேசிய பெண் ஸரஸ்வதிக்காகப் பரிந்து பேசினுள்.
இவர்கள் பேச்சுக்குப் பதில் கூருமல் ஸரஸ்வதி புன்சிரிப் புடன் கம்பளத்தை எடுத்து விரித்து அவர்களை அதில் உட்கார்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, அங்கிருந்த பெண்கள் பூஜை அறையைக் கவனித்துவிட்டு, இந்த வருஷம் ஏ ன் பொம்மைகளை அதிகமாகக் காளுேம்? சாவித்திரி எப்பொழுது பிறந்தகத்திலிருந்து வருவாள்?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். அங்கே நின்று பேசினல் மேலும் அவர்கள் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து. ஸரஸ்வதி பூஜை அறைக்குள் சென்று தட் டில் வெற்றிலே பாக்கு. பழத்துடன் வெளியே வந்தாள். வந்த பெண்கள் எல்லோரும் தாம்பூலம் பெற்றுக்கொண்டு வெளியே போய்விட்டார்கள்.
மாடியிலிருந்து அந்தப் பெண்கள் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண் டிருந்த ரகுபதி நிதான்மாகக் கீழே இறங்கி வந்தான்். பூஜை அறை வாயிற்படியில் நின்றிருந்த ஸரஸ்வதியைப் பார்த்து, 'சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கிறதுபற்றி உனக்குத் தெரியுமா ஸரஸ்ா? அதைப்பற்றி அழைப்பிதழ்களில் கூட வெளியிட்டிருக்கிருேமே! பத்திரிகைகளிலும் விளம்பரம் வந்திருக்கிறது' எ ன் று சொன்ஞன்.