* r+ 1*---- :_ fr:- -- rr T. " 岛 னவிருக்கி தா :
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஆவலுடன் ஒவ்வொரு நாளும் மனேவியின் வரவை எதிர்பார்த்துக்கொண் டிருந்தான்் ரகுபதி. கோபத்தைப் பாராட்டாமல் கடிதமும், அழைப்பும் அனுப்பிய பிறகு வராமல் இருக்கமாட்டார்கள் என்றும் நினைத்தான்். ஸ்வர்ணம் மட்டும் அடிக்கடி, 'அவர்கள் என்ன பண்ணப்போகிருர்களோ? வரு கிறதால்ை கடிதம் ஏதாவது போடமாட்டார்களா?' என்று சொல்லிக்கொண் டிருந்தாள். H
நண்பர்கள் எல்லோரும் வருவார்கள். ' எங்கேயடா உன் மனைவி?' என்று துணப்ப ஆரம்பித்துவிடுவார்கள். கல்யாண மாகி வந்த புதுசிலேயே நண்பர்கள் சாவித்திரியைத் தத்தம் வீடுகளுக்கு அழைத்து வரும்படி ரகுபதியைத் தொந்தரவு செய்துகொண் டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் ரகுபதியின் வீட்டைத் தேடியே வந்து பார்த்துவிட்டுப் போளுர்கள். இவர் களுக்குப் பதில் சொல்லுவதற்குப் போதுமென்று ஆகிவிடும்.
தெருவில் வண்டி ஏதாவது போனல் கூட ஸ்வர்ணம் கைக் காரியத்தைப் போட்டுவிட்டு வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவாள். 'வருகிருர்களோ இல்லையோ' என்று தனக்குத்தான்ே சொல்லிக் கொள்வதில் அவளுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. ரகுபதியின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. சாவித்திரியுடன் முதலில் யார் பேசுவது என்பது புரியாமல் மனத்தைக் குழப்பிக்கொண்டான் அவன். வலுவில் அவன்தான்் அவளுடன் பேசவேண்டும் என்பதையும் அவன் நன்குணர்ந் திருந்தான்். பிடிவாதக்காரியுடன் வேறென்ன செய்ய முடியும்? யோசித்தவண்ணம் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி இளமுறுவலுடன், 'அத்தான்ுக்கு என்னவோ பலமான யோசனை!' என்று சொல்லிக்கொண்டே தட்டில் சிற்றுண்டியைக் கொண்டுவந்து வைத்தாள். ---
என்ன யோசனை இருக்கப்போகிறது? எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியாகிவிட்டதா என்று நினைத்துப் பார்த்துக்