82 இருளும் ஒளியும்
ஏதோ ஒருவிதப் பாசம் விழுந்துவிட்டது. வெளியே சென்றிருந்து திரும்பிய ரகுபதிக்கு முதலில் தன் அத்தையைப் பார்த்ததும் து.ாக்கி வாரிப்போட்டது.
'ஏண்டா இப்படி இளைத்துவிட்டாய் ரகு?' என்று உள்ளுற ஆதங்கத்துடன் தான்் செய்து வந்த பொரிவிளாங்காய் உருண்டையையும், முறுக்கையும் தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு விசாரித்தாள் அலமு. வீட்டில் உருக்கிய நெய்யில் செய்த முறுக்கை ரசித்தபடியே ரகுபதி ஸரஸ்வதியுடன் உட் கார்ந்து பூத்தொடுக்கும் பெண்ணையும் கவனித்தான்். சற்று முன் பழைய சீட்டிப் புடைவையைக் கட்டிக்கொண் டிருந்த தங்கம், இப்பொழுது அழகிய பூப்போட்ட வாயல் புடைவையை உடுத்திருந்தாள். 'சீ, சீ, இது ஒன்றும் நன்ருக இல்லை. இந்தா, இதை உடுத்திக்கொள்' என்று ஆசையுடன் ஸரஸ்வதி கொடுத்த மருதாணிச் சிவப்பு வாயல் தங்கத்தின் தங்க நிற மேனிக்கு மிகவும் அழகாக இருந்தது.
'சரசர வென்று விரல்கள் மல்லிகையைத் தொடுப்பதில் முனைந்திருந்தன. சில நிமிஷங்களுக்குள் மல்லிகைச் சரம் தொடுத்துவிட்டாள். அதை அழகிய மாலையாக வளைத்துக் கட்டிவிட்டு அவள் நிமிர்ந்தபோது கூடத்தில் ஊஞ்சலில் உட் கார்ந்து தன்னையேடகவனிக்கும் ரகுபதியின் கண்களைத் தங்கம்
சந்தித்தாள். o
ஸரஸ்வதியின் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பி
ஞள். அவள் யாரென்று தெரிகிறதாடா உனக்கு? மறந்து போயிருப்பாய் நீ' என்று அலமு ஆரம்பித்து, 'என் கல்யாணத் தின் போது உனக்கு ஆறு வயசு இருக்கும். நம் கிராமத்துக்கு வந்திருந்தாயேடா. தொட்டிலில் கிடந்த தங்கத்தைப் பார்த்து விட்டு, 'இந்தப் பாப்பா அழகாக இருக்கிறது. அத்தை. அப்பா! எவ்வளவு பெரிய கண்கள் அத்தை. இந்தப் பாப்பாவை நான் எடுத்துக்கொண்டு போகிறேன் விளையாட' என்றெல்லாம் சொல்லுவாயே. தங்கத்தின் அப்பா- அதுதான்் என் மைத்து னன்கூட வேடிக்கையாக, 'டேய் பயலே! உனக்கே அவளைக் கொடுக்கிறேண்டா' என்று சொல்லுவான். நீதான்் புது சம்பந்தமாக எங்கேயோ போய்க் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாய். ஸரஸ்வதியைவிட்டு நீ வேறு இடத்தில் பெண் தேடியதே எங்களுக்கு ஆச்சரியந்தான்்!' என்று கூறி முடித்தாள்: