5ங்,ககோபாலைேடு கான்' 87
பேனாகப் பாடலாமே. ஆமாம்.... நீ ஏன் அழுதாய்?' என்று கிரும்பவும் கேட்டான் ரகுபதி.
அவள் மிகுந்த சங்கோஜத்துடன் அவனே ப் பார்த்து,
'ஒ'சொரு சமயம் என்னே ப்பற்றியே எனக்குப் பலத்த சந்தேகம் வந்துவிடுகிறது. ஒரு வேளே என்னைத்தான்் பிடிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். என்னேக் கல்யாணம் செய்துகொள் :தற்காகப் பெண் பார்க்க எங்கள் விட்டுக்கு இதுவரையில் ஏழெட்டுப் பேர்கள் வந்தார்கள். அம்மா கடன் வாங்கியாவது பஜ்ஜியும், லொஜ்ஜியும் செய்துவைப்பாள். வருகிறவர்கள் முதலில் தாங்கள் வசிக்கும் ஒட்டு வீட்டைப் பார்ப்பார்கள். பிறகு எங்கள் வீட்டில் புழங்கும் சாமான்களின் தராதரத்தை மதிப்பிடுவார்கள். அப்புறம் என்னைப் பாடச் சொல்லுவார்கள். இவ்வளவையும் செய்துவிட்டுப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பனங்காசுதான்் குறைவு என்று சொல்லிவிட்டுப் போய்விடு வார்கள். எப்படியோ ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு நான் கல்யானம் பண்ணிவிடுவாள். அம்மா. ஆனால் அவர்கள் கேட்கும் வெள்ளிப் பாத்திரங்களும், சீர் வரிசைகளுந்தான்் அம்மாவைப் பயமுறுத்துகின்றன. அத்தான்்!'
'இருக்கிறவர்கள் தாராளமாகக் கொடுக்கட்டும். வாங்கு பவர்கள் தாராளமாக வாங்கிக்கொள்ள ட்டும். ஆனால், பணத் தையும். தங்கத்தையும் ஒப்பிட்டு மதிப்புப் போடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று ரகுபதி நினைத்தான்். அழகில் சிறந்தவளாகக் குடித்தனப் பாங்குடன் இருக்கும் ஒரு பெண்ணை இந்தச் சமூகம் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறதென் முல் சமூகம் சீர்திருந்திவிட்டது என்று கூறமுடியுமா? பாரதி பாடல் களேப் பாடும் வாலிபர்களின் மனம்தான்் சீர்திருந்தி இருக்கிற தென்று சொல்லமுடியுமா?"
முகவாயில் கையை ஊன்றி யோசனையில் ஆழ்ந்திருந்த ரகுபதிக்கு முன்னல் ஸரஸ்வதி வந்து, 'அத்தான்்! நாளைக்குக் கடவுள் வாழ்த்து யார் பாடுகிறது?' என்று கேட்டாள்.
தங்கத்துக்கு ஏதாவது சிறிய பாட்டாகக் கற்றுக் கொடு
வி ரன . அவள் அழகாகப் பாடுகிருள். நீ இதுவரையில் கேட்கவில்லையே. பாவம்-' என்ருன் ரகுபதி. ஸ்ரஸ்வதி
தன் கைகளால் தங்கத்தின் கழுத்தை வளைத்துக் கட்டிக் கொண்டு, 'அப்படியா தங்கம்? ஆனல் வா போகலாம்: என்று அவள் கைகளைப் பற்றி அழைத்துப்போளுள்.