பக்கம்:இரு விலங்கு.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 இரு விலங்கு

அருணகிரிநாதப் பெருமான் முருகனிடத்தில் வேண்டு - கிருர். 'எம்பெருமானே! எனக்குத் தொண்டர்கள் காணு கின்ற புண்டரிகத்தைத் தரவேண்டும். அவர்கள் கண்டு அண்டுகின்ற தண்டையம் புண்டரிகத்தைத் தரவேண்டும். கண்டு அண்டி மொண்டு இருக்கிற ஞானம் எனும் தண்டையம் புண்டரிகத்தைத் தரவேண்டும். கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானம் எனும் தண்டையம் புண்டரிகத்தைத் தரவேண்டும்' என்று படிப்படியாக அடுக்கிக் காண்பதற்கு ஏற்றப பாடு . கிருர், - -

தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டு

இருக்கும் சுத்த ஞானம் எனும் தண்டையம் புண்டரிகம் தருவாய்)

2

முருகன் வீரம் முருகப் பெருமானுடைய பெரு வீரத்தைப் பின் இரண்டு அடிகளில் அருணகிரியார் சொல்கிரு.ர். அவன் வேலேப் பிரயோகம் செய்வதற்கு முன்னல் சூரன் தேவ லோகத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வந்தான். அவன் கொடுமையானவன். கொடிய தண்டனை செய்கின்ற தீய குணம் உடையவன், .

- சண்ட தண்டவெஞ்சூர் மண்டலம் கொண்டு பண்டு அண்டர் . அண்டம் கொண்டு மண்டிமிண்டக்

கண்டு உருண்டு அண்டர் விண்டு ஓடாமல்

வேல் தொட்ட காவலனே

அவன் தேவலோகத்தை முற்றுகையிட்டு வட்டமிட்டான். அவன் மண்டலம் கொண்டாம்ை. அது பழைய கதை. தேவர்களுக்குரிய உலகத்தைத் தன்னுடைய தாக்கிக்