பக்கம்:இரு விலங்கு.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10f

மண்கமழ் உந்தித் திருமால்

வலம்புரி ஒசைஅந்த விண்கமழ் சோலையும் வாவியும்

கேட்டது; வேல்எடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும்.

பிள்ளை திருஅரையில் கிண்கிணி ஓசை பதின

லுலகமும் கேட்டதுவே.

(மண் வாசனை வீசுகின்ற திருவயிற்றை யுடைய திருமா லாகிய கண்ணபிரான் ஊதிய வலம்புரிச் சங்கின் முழக்கம் அந்த வானுலகமெல்லாம் மணம் கமழும் கற்பகச் சோலை யிலும் வாவியிலும் கேட்டது; வேலைக் கையில் ஏந்தித் திண்மையான மலைகள் குலேயும்படி திருவிளையாடல் புரிந்த இளங்குழந்தையாகிய முருகனது அழகிய இடையிலுள்ள கிண்கிணியின் ஒசை பதினன்கு உலகமும் கேட்டது. -

உந்தி - வயிறு. விண் - தேவர் உலகம். பிள்ளை என்று பொது வகையிற் சொன்னலும் வேலெடுத்து என்ற சிறப் பினல் முருகன் என்பது தெளிவாயிற்று: அரை - இடை

இது கந்தர் அலங்காரத்தில் 98-ஆவது பாட்டு.