பக்கம்:இரு விலங்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

115


விழியையும் கண்டான். அது இப்போது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. மானேப் போன்ற மருண்ட பார்வையுடைய அது காது ஒரமாகப் போய்த் தேங்கி நின்றது. காதுக்கு வள்ளே இலையை உவமை சொல்வது ஒரு வழக்கம். வள்ளே என்பது தண்ணிரில் படரும் ஒரு வகைக் கொடி. இந்தக் கண் கெண்டைபோல இருக் கிறது. எப்போதும் துள்ளித் துள்ளிக் கு தி க் கி ற கெண்டை போல அங்கும் இங்கும் பார்க்கிறது. சலனம் உள்ள பார்வை பெண்களுக்கு அழகு என்று சொல்வார் கள். துள்ளிய கெண்டை போல இருக்கும் அந்தக் கண் இப்போது காதைப் போய் மோதுகிறது. சிறிய வள்ளே இலேயின்மேல் துள்ளிப் பாய்கிற கெண்டை போல அந்தக் கண் மாறி மாறித் தாவுகிறது. அவன் அந்தக் காதைக் கண்டான் பின்பு அந்தக் கண்ணேயும் கண் டான். கண்ட அ ள வில் நிற்கவில்லே. இத்தகைய பேரமுகி நம்முடன் பேசுவாளா என்ற எண்ணம் தோன் றியது. நம்மைப் பார்ப்பாள். என்று எண்ணி அவள் கண்ணேக் கண்டான். அவள் பார்வையைச் சந்தித்த பிறகு, அவள் நம்முடன் பேசுவாளா என்று எண்ணிஞன். பேச்சு வருகிற இடம் வாய் அல்லவா? அவன் பார்வை அங்கே தாவியது. அவளுடைய வாயிதழ்கள் கோவைப் பழம்போல இருந்தன, கோவைக்குத் தொண்டை என்று பெயர்,

சிறு வள்ளை தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையை,

அந்த வாயிலிருந்து ஒரு வார்த்தை வராதா என்று எண்ணினன். இப்படிப் பருவம் உள்ள ஒரு காளை தன்னே நின்று நிதானமாகப் பார்க்கும் வண்ணம் நாணம் உடைய பெண் நிற்பாளா? ஆளுல் எதிரே அந்தப் பெண் நின்று கொண்டுதான் இருந்தாள். அவள் நாணத்தை நீக்கிய பெண். பிறருடைய மனத்தை ஈர்ப்பதற்காகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/137&oldid=1402683" இலிருந்து மீள்விக்கப்பட்டது