பக்கம்:இரு விலங்கு.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


jø3 இரு விலங்கு

குரிய சிறந்த பண்புகளில் ஒன்று. யாரேனும் ஒருவர் ஒருபொருளேக் கேட்டால் அதைக் கொடுக்காமல் மறுக கிறவன்-இல்லேயென்று சொல்கிறவன்-அதமன்.கேட்ட வுடன் கொடுப்பவன் மத்திமன். ஆனல் கேட்பதற்கு முன்னல் அவனுக்கு இது வேண்டுமென்று அறிந்து தானே வலியச் சென்று கொடுக்கிறவன் உத்தமன். முருகப்பெருமான் உத்தமமான கருணையாளன். தன் கருணை எங்கே செல்லவேண்டுமோ அதனே அறிந்து தானே வலியச்சென்று ஆட்கொள்பவன். இந்தச் சிறந்த பண்பை வள்ளிநாயகியிடம் முருகன் காட்டினன். அவள் தன்னே நாடி வருகிறவரைக்கும் காத்திராமல் அவள் உள்ள இடத்திற்கே சென்று அவளைத் தடுத்து ஆட்கொண்டு பழைய உறவை நிலைநாட்டிக் கொண் டான் கள்ளத்தனமாக இருந்த பொருளே எல்லோரும் காண நானே பெறுவேன் என்று சொல்லி ஏற்றுக் கொண்டான். அத்தகைய முருகனே நீ பணியவில்க்லயே! அவன் திருத்தாளில் விருப்பத்தை வைத்து வழிபாடு செய்யவில்லையே! என்கிருர் அருணகிரியார். .

தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலே . - 'புறக் கண்னலே புற அழகைக் கண்டு ஏமாந்து போகிற நெஞ்சமே, அகக் கண்ணினலே அவன் திருவடியைக் கண்டு ஏத்துவாயாக அந்தத் திருவடி தானே வலிந்து சென்று அருளைப் பில்கும் தன்மையுடை யது, ஆகையால் நீ அதனே விரும்பினால் அது உன்னிடத் தில் வரும்' என்று சொல்வாரைப் போல இந்தப் பாட்டைச் சொல்கிருர். அந்தத் தாளே நாம் வேட்க வேண்டியதுதான்; அதனைப் போய் நாம் நாடிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்டவனுடைய திருத்தாள், விரும்புவாரை நாடி வருகிற தன்மை